பீஸ்ட், கே ஜி எஃப் 2 படங்களை ஓரம் கட்டிய காத்துவாக்குல 2 காதல்.. இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை

கடந்த மாதம் தமிழில் பல முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. சில திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் சாதனை புரிந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் வார இறுதியில் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.

கடந்த மாதம் பீஸ்ட், கே ஜி எஃப் 2, காத்துவாக்குல 2 காதல், ஆச்சர்யா, ஹாஸ்டல் போன்ற பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. அதனால் வார இறுதி நாளான நேற்று இந்த படங்களை காண தியேட்டர்களில் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

அதில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் இந்த படத்திற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டாத ரசிகர்கள் தற்போது இந்த படத்தை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். அதிலும் சமந்தா வரும் காட்சிகளில் ரசிகர்களின் விசில் சத்தம் தியேட்டரையே தெறிக்க விடுகிறதாம்.

அதனால் இப்படம் தற்போது வசூலில் முதலிடத்தில் இருக்கிறது. அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 14 வெளியான கே ஜி எஃப் 2 திரைப்படம் இன்னும் தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த படம் வசூலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துக் மாஸ் காட்டி வருகிறது.

அதைத்தொடர்ந்து சிரஞ்சீவி, ராம்சரண், பூஜா ஹெக்டே ஆகியோரின் நடிப்பில் வெளியான தெலுங்கு படமான ஆச்சர்யா வெளியான இரண்டு நாட்களிலேயே அதிக வசூலை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான ராம்சரணின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர்.

அதனால் தற்போது அவர் படம் தமிழ்நாட்டிலும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து விஜய்யின் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இப்படத்திற்கு பல நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் எந்த குறையும் இல்லாமல் லாபம் பெற்று உள்ளது.

மேலும் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஹாஸ்டல் திரைப்படத்தை பார்ப்பதற்கும் தற்போது கணிசமான கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் வசூலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Next Story

- Advertisement -