இனியும் ரசிகர்களை நம்பி பிரயோஜனம் இல்ல.. தனி ரூட்டை பிடித்த செம்பருத்தி கார்த்திக்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக் ராஜ். அதன்பின்பு, அதே தொலைக்காட்சியில் ஆபிஸ் சீரியலில் கதாநாயகனாக நடித்து மிகவும் பிரபலமானார். அதன்பிறகு ஜோடி நம்பர் 1 இல் சீசன் 7 இல் பங்கு பெற்று இறுதி சுற்று வரை சென்றார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இத்தொடரில் இவருக்கு ஜோடியாக ஷபானா இருந்தார். ஆதி, பார்வதி ஜோடி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனால் இந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தைப் பிடித்திருந்தது.

கார்த்திக் ராஜ் ஷார்ட் ஃபிலிமில் நடிக்க தொடங்கியதால் செம்பருத்தி சீரியல் இருந்து விலகினார். செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக்ராஜ் விலகியதால் இத்தொடர் டிஆர்பி பின்னுக்கு தள்ளப்பட்டது. கார்த்திக், ரம்யா பாண்டியன் உடன் இணைந்து முகிலன் என்ற வெப்சீரிஸ் இல் நடித்திருந்தார்.

இந்நிலையில் கார்த்திக் ராஜ் சில மாதங்களுக்கு முன் சிலர் என்னை படங்களில் நடிக்க விடாமல் தடுப்பதாகும், தான் நடிக்கும் படங்களிலும் பின் வேலைகள் பார்த்து தடுப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தானே படத்தை தயாரிக்கலாம் என முடிவு செய்தார்.

கார்த்திக் படம் தயாரிக்க நிதி பற்றாக்குறையால் அவரது ரசிகர்களிடம் உதவி கரம் நீட்டினார். அப்போதும் படம் தயாரிக்கும் அளவுக்கு நிதி கிடைக்காததால் படம் தயாரிப்பது பற்றி பேசாமல் இருந்தார். ஆனால் தற்போது கே ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் கார்த்திக் நடித்து வருகிறார்.

தற்போது அதற்கான படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாம். இதனால் கார்த்திக் ராஜ் பல போராட்டங்களுக்கு பிறகு தனது படத்தின் ஆரம்ப கட்ட வேலை தொடங்கியதால் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.