பாக்கியா போட்ட பிளானில் ஜெனியை மடக்கி காட்டிய செழியன்.. ஓவர் ரொமான்ஸ் காட்டும் ஜோடி புறாக்கள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா செய்த உருப்படியான விஷயத்தால் செழியன் வாழ்க்கை பிரகாசமாக ஆகிவிட்டது. அதாவது செழியனையும் ஜெனியையும் தனியாக பேச விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

அதற்காக ஒரே அறைக்குள் இருவரையும் தள்ளிவிட்டு பேச வைத்தார்கள். ஆனால் வெளியில் இருந்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று காது குளிர கேட்டு அதற்கான ரியாக்ஷனையும் பாக்யா மற்றும் எழில் கொடுத்து வந்தார்கள். இருந்தாலும் இதுதான் சான்ஸ், இதை நான் மிஸ் பண்ண தயாராக இல்லை என்று செழியன் கட்டம் கட்டி விட்டார்.

அந்த வகையில் ஜெனி இடம் அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் பண்ணினார். கடைசியில் எதுவுமே வேலைக்காகாது என்று தெரிந்ததும் காலில் விழுந்து செண்டிமெண்டாக பேசி தாக்கி விட்டார். இதனால் ஜெனிக்கும் வேறு வழி இல்லை செழியன் உடைய அன்பை புரிந்து கொண்டு சமரசம் ஆகிவிட்டார்.

பிறகு வெளியில் இருந்து கவனித்த பாக்யா, எழில் மற்றும் ஜெனியின் அம்மா உள்ளே எந்த சத்தமும் கேட்கவில்லையே என்று பயத்தில் கதவை திறக்கிறார்கள். ஆனால் கதவை திறந்து பார்த்ததும் அனைவருக்கும் ஷாக்கிங் ஆக ஒரு விஷயம் நடந்து விட்டது.

வெற்றியாக முடிந்த பாக்கியாவின் பிளான்

அதுதான் வழக்கம் போல இரண்டு பேரும் மனம் விட்டு பேசி சமாதானம் ஆகிவிட்டார்கள். அந்த வகையில் ஜெனி, செழியன் மார்போடு சாய்ந்து ஆறுதல் தேடிக் கொண்டார். உண்மையிலே இந்த விஷயம் பார்ப்பதற்கு ஒரு எமோஷனலாகவும் சந்தோசமாகவும் தான் இருந்தது.

அந்த அளவிற்கு செழியன் மற்றும் ஜெனியின் காதல் எதார்த்தத்தை காட்டியது. இதனைத் தொடர்ந்து இனி எக்காரணத்தை கொண்டும் ஜெனியை விட்டு நான் பிரிய மாட்டேன். எனக்கு இனி அவள் தான் எல்லாமே என்று ஓவர் ரொமான்ஸுடன் பாசத்தை காட்டி விட்டார் செழியன்.

இனி இவர்களை ஒன்றாக பார்க்கும் பொழுது ஜோசப் போட்ட மொத்த ஆர்ப்பாட்டத்திற்கும் ஆப்பு வைக்கும் விதமாக இருக்கப் போகிறது. அது மட்டுமில்லாமல் கோபி கிடைத்த கேப்பில் கிடா வெட்டி மொத்த குடும்பத்திலும் நல்ல பெயர் வாங்கிவிடலாம் என்று செழியனுக்கு வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ணுவதற்கு வேலையை பார்த்தார்.

ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிந்து பாக்கியா மகனின் வாழ்க்கையை போராடி மீட்டெடுத்து கொடுத்துவிட்டார். இனி பாக்யா மற்றும் இரண்டு மகன்கள் வாழ்க்கை சுமூகமாக ஆகிவிட்டது. இதனைத் தொடர்ந்து கோபி மற்றும் ஈஸ்வரியும் திருந்துற மாதிரி காட்சிகள் கூடிய விரைவில் வந்து நாடகத்தை சுபம் போட்டு முடிக்கப் போகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்