சைக்கோவை தேடி போகும் செழியன், எழில் எடுக்கும் விபரீதம்.. பாக்கியாவிடம் தலைகுனிந்து நிற்கும் சக்காளத்தி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ரெண்டு பொண்டாட்டி இரண்டு புருஷன் கதையை மட்டமாக உருட்டி வருகிறார்கள். இதை இன்னும் அசிங்கப்படுத்தும் விதமாக ஜெனிக்கு வேறொரு மாப்பிள்ளையும், செழியனுக்கு வேறொரு பெண்ணையும் பார்ப்பதற்கு ஏற்பாடு நடக்கப் போகிறது.

அதாவது ஜெனிக்கு வேற ஒரு பையனுடன் திருமணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று ஜெனியின் அப்பா மும்மரமாக முயற்சி செய்து வருகிறார். இதை தெரிந்து கொண்ட பாக்யாவின் மாமியார் ஈஸ்வரி, அவருக்கே அவ்வளவு கொழுப்பு இருக்கிறது என்றால் என் பேரன் மட்டும் என்ன சும்மாவா என்று சொல்லி களத்தில் இறங்கி விட்டார்.

இதை தெரிந்து கொண்ட செழியன் வேண்டாம் பாட்டி என்று தடுப்பதற்கு முயற்சி செய்கிறார். அதே மாதிரி பாக்கியாவும் அவர்கள் தான் கோபத்தில் ஏதாவது பண்ணுகிறார்கள் என்றால் நாமும் அப்படி பண்ணினால் நஷ்டப்பட்டு நிற்கப் போவது செழியன் தான் என்று சொல்கிறார்.

ஆனால் ஈஸ்வரி காது கொடுத்து எதையும் கேட்காமல் புரோகிதரை வீட்டுக்கு வரவழைத்து விட்டார். இதை பார்த்ததும் கோபத்தில் செழியன் வீட்டில் இருந்து வெளியே கிளம்பி விட்டார். அத்துடன் காரை வேகமாக ஓட்டி போகிறார்.

இதை ரோட்டில் இருந்து பார்த்த எழில், அண்ணன் ஏன் இவ்வளவு ஸ்பீடாக போகிறார் என்ற குழப்பத்தில் பாக்யாவுக்கு போன் பண்ணுகிறார். அங்கே ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். அதற்கு பாக்யா வீட்டில் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்கிறார்.

உடனே எழில், செழியினை பாலோ பண்ணி போகிறார். அந்த நேரத்தில் செழியன் கோபத்தில் எங்கே போகிறார் என்றால் சைக்கோ மாலினியை தேடி வீட்டிற்கு போய்விட்டார். போனதும் ஒட்டுமொத்த கோபத்துடன் நடந்த பழைய விஷயங்களை சொல்லி நானா உன் பின்னாடி அலைஞ்சேன்.

எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன். அதையும் தாண்டி நீ தான் என் பின்னாடி அலஞ்சாய் என்று சொல்கிறார். இதை அனைத்தையுமே எழில் வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்போது இதுதான் சான்ஸ் என்று நடந்த அனைத்து விஷயங்களையும் போன் மூலம் வீடியோ எடுத்து விடுகிறார். கண்டிப்பாக இந்த வீடியோ ஜெனிக்கு அனுப்பி நடந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுவார். இதனைத் தொடர்ந்து ராதிகா, பாக்யாவிடம் கோபி என்னை கல்யாணம் பண்ணினார் என்று தெரிந்ததும் எந்த யோசனையும் இல்லாமல் டைவர்ஸ் பண்ணி விட்டீர்கள்.

இப்பொழுது ஜெனிக்கு மட்டும் ஏன் சாதகமாக நிற்காமல் செழியனுக்காக சப்போர்ட் பண்றீங்க என்று கேட்கிறார். அதற்கு பாக்யா, கோபி எனக்கு துரோகம் பண்ணினார். ஆனால் செழியன் அப்படி இல்லை அவங்களுக்குள் நினைத்துப் பார்த்து சந்தோஷப்படக்கூடிய பல விஷயங்கள் இருக்கிறது.

அதனால் தான் அவர்கள் வாழ்க்கையில் ஒன்று சேரனும் என்று நான் போராடுகிறேன் என்று சொல்லி ராதிகாவை அசிங்கப்படுத்தி விட்டார். இதை கேட்டதும் அவரால் ஒன்னும் சொல்ல முடியாமல் தலைகுனிந்து போய் நிற்கிறார். ஆக மொத்தத்தில் இன்னும் கூடிய விரைவில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு சுபம் போட நேரம் வந்துவிட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்