விஜய்யை பழிவாங்க துடிக்கும் பிரபலம்.. தானாக வந்து தலையை கொடுத்த அஜித்

கடந்த சில மாதங்களாகவே விஜய் குறித்து ஏகப்பட்ட செய்திகள் வெளிவந்து பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதிலும் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பிறகு பல பூகம்பங்கள் வெடித்துக் கொண்டிருக்கிறது. அதில் விஜய்யை பழிவாங்குவதற்காக சில மறைமுகமான வேலைகளும் செய்யப்பட்டு வருவது கடும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

அதாவது இப்போது திரை உலகில் விஜய், அஜித் இருவர்களில் யார் தான் நம்பர் ஒன் என்ற பேச்சு எழுந்துள்ளது. இது போன்ற சர்ச்சைகளில் எல்லாம் சிக்க விரும்பாத அஜித் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வந்தார். ஆனால் அவரும் இப்போது இந்த ஆட்டத்தில் இறங்கி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கெல்லாம் பின்னணியில் முக்கிய பிரபலம் ஒருவர் செயல்பட்டு வருகிறாராம்.

Also read: லியோவிற்கு பயத்தை காட்ட வரும் ஏகே 62 போஸ்டர்.. எப்ப ரிலீஸ் தெரியுமா?

தற்போது விஜய் லியோ திரைப்படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோன்று துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அஜித் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் அந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த படம் தொடர்பாக எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

இப்படி பெரும் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கும் இந்த விவகாரத்திற்கு பின்னணியில் லைக்கா நிறுவனம் தான் செயல்பட்டு வருகிறதாம். அது மட்டுமல்லாமல் விஜய்யை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அஜித்தை அவருக்கு தெரியாமலேயே கொம்பு சீவி விட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக தான் அதிக சம்பளம் கொடுத்து அவரை தங்கள் பக்கம் இழுத்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also read: லியோ படத்திலிருந்து கதாநாயகி விலகலா?. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திரிஷா

ஏனென்றால் மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜய்யை தங்கள் பேனரில் நடிக்க வைக்க லைக்கா பலமுறை முயற்சி எடுத்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கூட அவரை நடிக்க வைக்க நடந்த முயற்சி பலருக்கும் தெரியும். ஆனால் விஜய் அதிலெல்லாம் சிக்காமல் போக்கு காட்டியதால் தான் லைக்கா இப்படி ஒரு பழிவாங்கும் படலத்தை உருவாக்கி இருக்கிறதாம்.

அதன் காரணமாகவே அவருக்கு போட்டி நடிகராக பார்க்கப்பட்டு வரும் அஜித்தை புக் செய்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவரை நம்பர் ஒன் இடத்தில் உட்கார வைக்கவும் பிளான் படுஜோராக நடந்து வருகிறது. அதனாலேயே கதை விஷயத்தில் ஆரம்பித்து இயக்குனர் வரை ஒவ்வொன்றையும் லைக்கா பார்த்து பார்த்து செய்து வருகிறதாம். இந்த விவகாரம் தற்போது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அஜித் தானாகவே வந்து தலையை கொடுத்து விட்டாரே என்று திரை உலகில் பேசி வருகின்றனர்.

Also read: விக்னேஷ் சிவனின் வாழ்க்கையை சல்லி சல்லியாய் நொறுக்கும் அஜித்.. ரெடியாக உள்ள அடுத்த ஆப்பு

- Advertisement -spot_img

Trending News