ஸ்ரீநிதியை தொடர்ந்து சிம்பு மேல் கிரஷ்ஷாக இருக்கும் பிரபலம்.. 16 வருட காதலாம்!

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு சிம்புவின் மீது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள் அவருடைய அடுத்த பட ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். இன்னிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் வெந்து தணிந்த காடுகள் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது.

அதன் பிறகு  கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் அமெரிக்காவிற்கு அவர் அப்பாவுடன் சென்றிருக்கிறார்.

சிகிச்சை முடிந்து திரும்பியதும் ஜூலை மாதத்தில் திரும்புவதால் மறுபடியும் பத்து தல படத்தில் படப்பிடிப்பில் ஜூலை 15-ம் தேதி கலந்து கொள்ளும் முடிவில் சிம்பு உள்ளார். இதற்கிடையில் தற்போது சிம்புவை 16 வருடமாக காதலிப்பதாகக் பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தங்கை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்து வருகிறார். அவரது தங்கையான மதுரா பள்ளி படிக்கும் போது பிரபல தொலைக்காட்சியில் சிம்புவின் பாடல் ஒளிபரப்பப் பட்டுள்ளது. அப்போதிலிருந்தே அவர் மேல் இவருக்கு கிரஷ் ஏற்பட்டதாகவும் பல நாட்களுக்குப் பிறகு தான் அந்த படத்தின் பெயர் தம் எனவும், நடித்துள்ளவர் சிம்பு எனவும் தனது தெரியும் என கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட பதினாறு வருடமாக ஒரு தலையாக காதலித்து வருவதாகவும் கூறியுள்ளார். தற்போது ரசிகர்கள் பலரும் இந்த செய்தியை வைரலாகி வருகின்றனர். சமீபத்தில் சீரியல் நடிகை ஸ்ரீநிதி சிம்புவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர் வீட்டு முன்பு தர்ணா செய்து பெரும் பரபரப்பை கிளப்பி, அதன்பிறகு ஸ்ரீநிதி மன அழுத்தம் ஏற்பட்டதால் இப்படி சில வேலைகளைப் பார்த்து வந்ததாக சொல்லப்பட்டது.

இதனால் தற்போது ஸ்ரீநிதி சென்னை புறநகர் புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் பெற்றுக் கொண்டிருக்கிறார். முன்பு சினிமாவில் கூட நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட சிம்பு, சமீபகாலமாக சீரியல் நடிகைகளுடன் கிசுகிசுத்தப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.

Next Story

- Advertisement -