புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

காமெடி நடிகருக்காக 15 பேரை அடித்து விரட்டிய விஜயகாந்த்.. சவுக்கு தோப்பில் கேப்டன் செய்த அட்டூழியம்

விஜயகாந்த் தற்போது உள்ள நிலைமையை பார்த்த தமிழ் சினிமா மற்றும் ரசிகர்கள் மனம் நொந்து போய் உள்ளனர். ஏனென்றால் அப்போது கம்பீரம் என்றாலே விஜயகாந்த் தான். தன்னை நாடி ஏழை எளியவர் யார் எது கேட்டாலும் உடனே உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்.

இப்படிப்பட்ட நல்லவருக்கா இந்த நிலைமை என எல்லோரும் கவலைப்பட்டு வருகிறார்கள். ஆரம்பத்தில் தண்டால், உடற்பயிற்சி மூலம் விஜயகாந்த் தனது உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருந்தார். இப்போதுதான் அவர் இப்படி ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு துவண்டு போய் உள்ளார்.

இந்நிலையில் காமெடி நடிகர் ஒருவருக்காக விஜயகாந்த் சவுக்கு தோப்பில் 15 பேரை அடித்து தும்சம் செய்திருந்தார். விஜயகாந்த், ராம்கி நிரோஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் செந்தூரப்பூவே. அப்போது இந்த படத்தின் சூட்டிங் ஈசிஆரில் உள்ள சவுக்கு தோப்பில் நடந்தது.

அந்தச் சமயத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அங்கு இந்த ஊரைச் சேர்ந்த ஊர்காரர்கள் சிலர் குடித்துவிட்டு காமெடி நடிகர் செந்தில் இடம் வம்பு இழுத்துள்ளனர். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத விஜயகாந்த் அவர்களை சுழற்றி சுழற்றி அடித்தாராம்.

அப்போது கையில் எதெல்லாம் கிடைத்ததோ அனைத்தையும் கொண்டு அடித்து விரட்டிவிட்டாராம். அந்த இடமே கலவரமாக மாறிவிட்டதாம். பின்பு ஊர்காரர்கள் கூடி எஸ்பி முதற்கொண்டு தலையிட்டு இந்தப் பிரச்சினையை சமூகமாக முடித்து வைத்தார்களாம். ஒரு காமெடி நடிகரை வம்பு இழுக்கும் போது தனக்கென்ன என்று விஜயகாந்த் சென்றிருக்கலாம்.

ஆனால் சக சினிமா நடிகருக்காக ஒரு பிரச்சனை என்றால் விஜயகாந்த் உடனே உயிரை கொடுத்து காப்பாற்ற போராடுவார். இதேபோல் விஜயகாந்த் பல இடங்களில் பல நடிகர்களுக்கு உதவி செய்துள்ளார். மேலும் தற்போது சினிமாவில் முக்கிய நடிகர்கள் பலர் விஜயகாந்த்தால் தான் நல்ல நிலைமையில் உள்ளனர்.

- Advertisement -

Trending News