ஒன்றிய அரசை நேரடியாக தாக்கிய அட்லியின் தைரியம்.. இரட்டிப்பு மரியாதை ஒரு பக்கம் இருந்தாலும் பயமா இருக்கு

Jawan Atlee: ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் அட்லி. இவர் என்னதான் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை வரிசையாகவும் எடுத்திருந்தாலும், இவர் மீது விமர்சனங்கள் காட்டுத் தீ போல் பரவிக் கொண்டே தான் இருந்தது. இப்போது அனைவரது வாயும் அடைக்கும் அளவிற்கு இவரின் “ஜவான்’ திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கலாம்.

ஏராளமான விமர்சனங்களுக்கு உள்ளான இவர் தமிழில் இருந்து ஹிந்தியில் “ஜவான்” என்ற திரைப்படம் இயக்கியுள்ளார். இதில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். திரைப்படத்தின் மூலம் அட்லீயின் மீது சுமத்தப்பட்ட விமர்சனங்கள் எல்லாம் மாறி, இவர் மீது ரசிகர்களிடையே நல்ல மரியாதை உண்டாகும் வகையில் இத்திரைப்படம் அவருக்கு அமைந்துள்ளது என கருத்துக்கணிப்பு.

Also Read: ஜவான் பார்த்துட்டு பின் வாங்கினாரா விஜய்.? அட்லியோட அடுத்த ஸ்கெட்ச் இந்த டாப் ஹீரோவுக்கு தான்

இத்திரைப்படத்தில் அரசாங்கத்தால் ஒரு சாமானியன் பாதிக்கப்பட்டால் என்னவாகும், ஆக்சன் திரில்லர், போராட்டமே மையமாகக் கொண்டிருக்கும் கதையாகும். இதில் அட்லி அவரின் குருநாதர் சங்கரை போலவே அரசாங்கத்திற்கு எதிராக ஆணித்தனமாக கருத்துக்களையும் போராட்டங்களையும் இந்த ஜவான் படத்தின் முலம் தெளிவாக வெளிக்கொண்டு வந்துள்ளார்.

இதுவரை பாலிவுட்டில் வெளியான திரைப்படங்களில் ஒன்றில் கூட பெரிதாக இப்படிப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக கதை மையமாக வைத்து படம் எடுக்கப்படவில்லை. இதுவே முதல் பாலிவுட் படமாகும், ஒன்றிய அரசை பற்றி எதிர்த்து சித்தரித்து வெளியாகும் படமாகும். அதுவும் அட்லி மிகப்பெரிய நடிகர் ஷாருக்கானை பயன்படுத்தி செய்துள்ளார்.

Also Read: உயிரை காப்பாற்ற தானே மருத்துவமனைக்கு கார் ஓட்டிய மாரிமுத்து.. கடைசி நிமிடங்களில் நடந்தது இதுதான்

இவ்வளவு தைரியமாக மக்கள் பிரச்சனையை முன் நிறுத்தி திரைப்படம் எடுப்பதினாலேயே, இவருடைய பெயர் மாற தொடங்கும். அதிலும் இவர் வயதில் சிறியவராக இருந்தாலும் கூட இவ்வளவு தைரியமாக செயல்படுவதால், இனிமேல் இவர் மக்கள் இயக்குனராக அறியப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையிலும் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு தான் கிடைத்துள்ளது.

தற்போது வரை இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 73லிருந்து 75 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் மூலம் அட்லி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதிலிருந்து இவருடைய இயக்கத்தில் இனிமேல் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் அனைத்தும், இவருக்கென ஒரு தனி பெயரையும் அடையாளத்தையும் உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் தைரியமா எடுத்து இரட்டிப்பு மரியாதை கிடைத்தாலும் மறுபுறம் பயமா தான் இருக்கும்.

Also Read: 57 வயது எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து மரணம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன திரையுலகம்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -