ஜவான் பார்த்துட்டு பின் வாங்கினாரா விஜய்.? அட்லியோட அடுத்த ஸ்கெட்ச் இந்த டாப் ஹீரோவுக்கு தான்

Atlee – Jawan Movie: இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி நடித்த ஜவான் படம் நேற்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. படத்தின் முதல் நாள் வசூல், ஷாருக்கானின் பெயரை காப்பாற்றி இருந்தாலும், படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை என்பது நேற்றைய விமர்சனங்களில் இருந்து தெரிகிறது.

ஜவான் படம் இயல்பான தமிழ் படம் போல் இல்லை என்றும், டப்பிங் படம் பார்ப்பது போல் இருக்கிறது என்றும் படம் பார்த்தவர்கள் தங்களுடைய விமர்சனங்களை சொல்லி இருக்கிறார்கள். அதேபோல் வழக்கம்போல அட்லி தன்னுடைய காப்பியடிக்கும் வேலையை இந்தப் படத்திலும் காட்டிவிட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

Also Read:அட்லியை நம்பி இறங்கிய ஷாருக்கான் தல தப்பினாரா.? ஜவான் முதல் நாள் மொத்த வசூல் ரிப்போர்ட்

அட்லிக்கு இது பாலிவுட் என்ட்ரி என்பதை தாண்டி, இந்த படத்தின் வெற்றியை வைத்து தான் அடுத்து தமிழில் இவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் இருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் விஜய்யை வைத்து இவர் படம் இயக்குவதாக இருந்தது. தற்போது ஜவான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், தளபதி தன்னுடைய தம்பிக்கு டாட்டா காட்டி விட்டார்.

எவ்வளவு வாங்கினாலும் அதை பற்றி சற்றும் மனம் தளராமல் அடுத்த கட்ட ஸ்கெட்ச்சை பக்காவாக போட்டுவிட்டார் இயக்குனர் அட்லி. பாலிவுட்டை முடித்துவிட்டு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருவார் என்று பார்த்தால், அவர் அடுத்து டோலிவுட்டையும் ஒரு கை பார்த்துவிட்டு தான் வருவேன் என முன்னணி ஹீரோ ஒருவரை வளைத்து போட்டு இருக்கிறார்.

Also Read:யோகி பாபு சீனை வெட்டி தூக்கிய அட்லி.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்

தெலுங்கு சினிமா உலகின் முன்னணி ஹீரோவாக இருக்கும் அல்லு அர்ஜுன் தான் அட்லி வளைத்து போட்டிருக்கும் நடிகர். சமீபத்தில் இவர், அல்லு அர்ஜுனுக்கு கதை சொல்லி இருப்பதாகவும், கதை ரொம்பவும் பிடித்துப் போயிருந்தாலும், ஜவான் பட ரிலீஸ்க்கு பிறகு தன்னுடைய முடிவை சொல்லுவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஜவான் படத்திற்கு தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்கள் கிடைத்து இருந்தாலும், பாலிவுட் சினிமா உலகில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி இணைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் முடிந்த பிறகு, இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:சத்யராஜின் இந்த பிளாப் படத்தின் கதையை சுட்ட அட்லி.. ஜவானால் தலைவலியில் ஷாருக்கான்

- Advertisement -