தளபதி மீது பூசப்பட்ட மதசாயத்தை நேக்கா கலைத்த புஸ்ஸி ஆனந்த்.. இவர நம்பி விஜய் பிரதமர் தேர்தலில் கூட நிக்கலாம்

Thalapathy Vijay: மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அர்ஜுனருக்கு கிருஷ்ணர் தேர் ஓட்டினார் என்று சொல்வார்கள். அப்படி நிகழ்காலத்தில் விஜய் ஜெயிப்பதற்காக பல திட்டங்களை போட்டுக் கொண்டிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.

இவருடைய அறிவுரைப்படி தான் விஜய் அடுத்தடுத்து அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகிறார். கடந்த வருடம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெடுத்த மாணவர்களை நேரில் அழைத்து விஜய் பாராட்டியதோடு பரிசுகளை வழங்கி இருந்தார்.

அதே மாதிரி இந்த வருடத்திற்கான பாராட்டு விழாவும் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரசிய நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்கள் இடையே விஜய் பேசியது பெரிய அளவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

மதசாயத்தை நேக்கா கலைத்த புஸ்ஸி ஆனந்த்

இந்த முறை விஜய் ரொம்பவும் வெளிப்படையாகவே அரசியல் பேசியிருக்கிறார். விஜய் அரசியல் பேசுவதற்கு முன்பாகவே புஸ்ஸி ஆனந்த் தரமான ஒரு செய்கையை செய்து இருக்கிறார். அதாவது நடிகர் என்பதை தாண்டி விஜய் பொது வாழ்க்கை என்று ஏதாவது தொடங்கினாலே அவர் மீது மத சாயம் பூச சிலர் காத்திருக்கிறார்கள்.

அதிலும் ஜோசப் விஜய் என்ற அவருடைய முழு பெயரையும் ரொம்பவும் அழுத்தம் திருத்தமாக அதற்காக பயன்படுத்துவார்கள். இன்று பாராட்டு விழா இடத்திற்கு விஜய் சாதாரணமாக தான் வந்திருந்தார். ஒரு மாணவரின் அம்மா விஜய் நடந்து வந்து கொண்டிருக்கும்போதே அவரை அழைத்து அவருக்கு செந்தூரப் பொட்டு வைத்தார்.

விஜய் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அந்த பொட்டை வைக்க விட்டார். விஜய்க்கு எம்மதமும் சம்மதம் என்பதை மறைமுகமாக இதன் மூலம் தெரிவித்து இருக்கிறார்கள். கண்டிப்பாக இது புஸ்ஸி ஆனந்தின் வேலையாகத்தான் இருக்கும் என பேசிக்கொள்கிறார்கள்.

இப்படி ஒரு பலே கெட்டிக்காரர் தன்னுடன் இருக்கும்போது முதலமைச்சர் தேர்தல் என்ன, விஜய் பிரதமர் தேர்தலில் கூட நிற்கலாம்.

Next Story

- Advertisement -