வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அய்யய்யோ அவன் என்ட்ரி மட்டும் இருக்க கூடாது.? மரண பீதியில் தங்களை காப்பாற்ற திட்டம் போடும் Bully Gang

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் கொஞ்சம் போராக சென்ற நிலையில் அதை தூக்கி நிறுத்தும் விதமாக இப்போது அதிரடி சம்பவங்கள் அரங்கேற இருக்கிறது. அதன்படி காலையில் வந்த முதல் ப்ரோமோவே இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது.

அதாவது 14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் மூன்று புது வரவுகள் வீட்டிற்குள் வரப்போகிறார்கள் என பிக்பாஸ் அறிவித்தார். அதை தொடர்ந்து வந்த அடுத்த ப்ரோமோவில் ஏற்கனவே வீட்டை விட்டு துரத்தப்பட்ட பிரகஸ்பதிகள் தான் வரப்போகிறார்கள் என்று நமக்கும் சேர்த்து ஒரு பெரும் குண்டைத் தூக்கிப் போட்டார் பிக் பாஸ்.

இதனால் ஆடிப்போன ஹவுஸ் மேட்ஸ் எப்படி தங்களை காத்துக் கொள்வது என திட்டம் போட தொடங்கி விட்டார்கள். அதை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் மாயா வெளியில் தைரியமாக பேசினாலும் உள்ளுக்குள் பதரறுவது வெளிப்படையாகவே தெரிகிறது. ஏனென்றால் வீட்டை விட்டு வெளியேறிய பிரதீப் ஒருவேளை வரக்கூடும் என்ற எண்ணம் தான்.

Also read: 14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி.. வெளியேற போவது யாரு?

இதைத்தான் இப்போது ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பிரதீப் நான் கோவாவுக்கு போகிறேன் என நேற்று ஒரு ட்வீட் போட்டு இருந்தார். ஆனால் இப்படி எல்லாம் நம்மை குழப்பி ஒருவேளை அவர் வீட்டுக்குள் வந்து விடுவாரோ என்பதுதான் இப்போது ரசிகர்களின் ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

அப்படி மட்டும் வந்துவிட்டால் பிக் பாஸ் ஆட்டம் களைக்கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோன்று யுகேந்திரன், வினுஷா வருவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இதில் நிக்சனால் அவமானப்படுத்தப்பட்ட வினுஷா வந்தால் சிறப்பாக இருக்கும். அதே போன்று யுகேந்திரன் வந்தால் பிரதீப்புக்கு ஆதரவாக அவர் முக்கிய பிரச்சினையை கையில் எடுப்பார்.

இப்படி ரசிகர்கள் ஒவ்வொரு யூகத்தில் இருக்கின்றனர். ஆனால் வீட்டில் இருக்கும் Bully Gang வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் பிரதீப் என்ட்ரி குறித்த பயம் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்கிறது. அதனாலேயே ஒரு கை பார்க்கலாம் என அவர்கள் ஆட்டத்தை ஆரம்பிக்க காத்திருக்கின்றனர். ஆக மொத்தம் பிக்பாஸ் பற்ற வைத்த இந்த நெருப்பு தற்போது பற்றி கொண்டு எரிகிறது.

Also read: ஓவர் தலைக்கனத்தில் ஆடும் விச்சு.. தலையாட்டி பொம்மையாக மாறிவரும் அச்சு, உஷாராகிய தினேஷ்

- Advertisement -

Trending News