வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

வளைகாப்பில் ஒன்று கூடும் அண்ணன், தம்பிகள்.. ஆரம்பிக்கப் போகும் அடுத்த பஞ்சாயத்து

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து அதனுடைய முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்திருந்தது. ஆனால் தற்போது கூட்டு குடும்பத்தால் வருகின்ற பிரச்சினையால் அண்ணன் தம்பிகளுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அதுதான் சொல்வார்கள் எலி வளையானாலும் அது தனி வளையாக இருக்க வேண்டும்.

என்னதான் அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் அவர்கள் தனித்தனியாக இருந்தால் மட்டுமே அவர்களுடைய உறவு இனிமையாக இருக்கும். ஆனால் இதில் ஜீவா தனியாக வாழ்ந்து காட்டாமல் அவருடைய மாமனார் வீட்டிலேயே தஞ்சம் அடைந்து வருகிறார். இதற்கு இவர் பேசாமல் அண்ணன் கூடவே இருந்து இருக்கலாம்.

Also read: சக்காளத்தி சண்டையை தொடங்கி வைத்த ராதிகா.. உருள போகும் கோபியின் தலை

தற்போது முல்லையின் வளைகாப்பு ரொம்பவே கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த பங்க்ஷனில் ஜீவா மீனா மற்றும் கண்ணன் ஐஸ்வர்யா வரவேண்டும் என்பதற்காக தனம் கதிர் அவர்களை பங்க்ஷனில் கலந்து கொள்ளுமாறு கூப்பிடுகிறார்கள். அதற்காக ஐஸ்வர்யா கண்ணனிடம் நம் கெத்தாக தெரிய வேண்டும். அதனால் கிரெடிட் கார்டு மூலம் அவர்களுக்கு மோதிரத்தை வாங்கிக் கொடுக்கலாம் என்று சொல்கிறார்.

அடுத்ததாக ஜீவா இந்த பங்க்ஷனிற்கு போகவா வேண்டாமா என்று ஒரு பெரிய குழப்பத்துடனே இருக்கிறார். ஆனால் மீனா தன் புகுந்த வீட்டு குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக ஜீவாவிடம் பேசி வருகிறார். இதை பார்க்கும் பொழுது மீனா ஒரு நல்ல மருமகளாக இருக்கிறாள் என்று தெரிகிறது.

Also read: நிச்சயதார்த்தமே வியாபாரமாக மாற்றிய குணசேகரன்.. அப்பத்தா எடுக்கப் போகும் முடிவு இதுதான்

அடுத்ததாக தனம் இந்த வளைகாப்பின் மூலம் மறுபடியும் இந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்று ரொம்பவே எதிர்பார்த்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தனம் எதிர்பார்த்தபடி அண்ணன் தம்பிகள் அனைவரும் இந்த பங்க்ஷனில் கலந்து கொள்கிறார்கள். அதன் பின் ஒவ்வொருவரும் முல்லைக்கு பரிசு கொடுத்து வருகிறார்.

மேலும் இந்த பங்க்ஷனை உற்சாகப்படுத்துவதற்கு அண்ணன் தம்பிகள் ஒன்று சேர்ந்து டான்ஸ் ஆடி மகிழ்ந்து வருகிறார்கள். இதை பார்த்த தனம் இந்த குடும்பம் இதிலிருந்து மறுபடியும் ஒன்று சேர வேண்டும் என்று உணர்வு பூர்வமாக வேண்டிக் கொள்கிறாள். ஆனால் இது கனவா நிஜமா என்று ஒரு ட்விஸ்ட்டாக இந்த வார எபிசோட் தொடங்குகிறது. மேலும் இது நிஜமாக இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

Also read: ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு என்று புலம்பும் கோபி.. மாமியாரின் டார்ச்சர்

- Advertisement -

Trending News