Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு சின்ன மாற்றம் பண்ணுங்க போதும்..மாஸ்டரில் நான்தான் நடிப்பேன்.. அடம்பிடிக்கும் பாலிவுட் டாப் ஹீரோ

master

மாஸ்டர் படம் இந்தியா முழுவதும் ரிலீஸாகியிருந்தாலும் மற்ற மொழிகளில் மாஸ்டர் படத்தை ரீமேக் செய்வதில் பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வரும் செய்திகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கின்றன.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகி தரமான சம்பவம் செய்த திரைப்படம் தான் மாஸ்டர். மாஸ்டர் படம் ஹிட்டானதை விட வசூலை வாரி குவித்தது தான் பல முன்னணி நடிகர்களும் ஆச்சரியத்தை கொடுத்தது.

இந்திய சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களும் தங்களுடைய படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்குக் காரணம் தங்களுடைய படங்கள் வசூல் செய்யுமா என்ற சந்தேகம் தான்.

ஆனால் விஜய் மட்டுமே தைரியமாக தன்னுடைய படத்தை நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்தார். இவ்வளவு கூட்டம் வரும் என விஜய்யே எதிர்பார்த்திருக்க மாட்டார்.அந்தளவுக்கு மாஸ்டர் படம் நல்ல வசூலை ஈட்டி கொடுத்துள்ளது.

இதனை பார்த்து பல முன்னணி நடிகர்களும் தங்களுடைய போட்டியிடும் முடிவை கைவிட்டுவிட்டு மீண்டும் தியேட்டரில் படங்களை வெளியிட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அவருடைய சினிமா கேரியரில் முதல் முறையாக pan-india படமாக வெளியானது.

இந்தியை தவிர மற்ற அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்தாக வேண்டும் என அடம்பிடித்து கொண்டிருக்கிறாராம் சல்மான் கான். மேலும் ஹிந்தியில் தென்னிந்திய படங்களை ரீமேக் செய்வதில் வல்லவராக இருக்கும் பிரபுதேவா இந்த படத்தை இயக்கவும் அதிக வாய்ப்புள்ளதாம்.

vijay-salmankhan-cinemapettai

vijay-salmankhan-cinemapettai

Continue Reading
To Top