பாலிவுட்டே பொறாமைப்படும் 2 தமிழ் நடிகர்கள்.. தனுஷ் மீது பயங்கர கிரஸ் என கூறிய சர்ச்சை நடிகை

நடிகைகளை பொறுத்தவரை எந்த மொழிப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை ஈசியாக பெற்றுவிடுவார்கள். மேலும் நடிகைகளுக்கு ரீச்சும் ஈசியாக கிடைத்து விடும். ஆனால் ஹீரோக்களை மக்கள் அப்படி எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. ஹீரோக்கள் மற்ற மொழிப்படங்களில் நடிக்க அதனால் தான் யோசிக்கிறார்கள்.

ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் தான் நடிகர் தனுஷ். தனுஷ் ஷமிதாப், அம்பிகாபதி, அட்ராங்கி ரே என மூன்று பாலிவூட் படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய சிறந்த நடிப்பினால் பாலிவுட் ரசிகர்களையும் தன் வசம் இழுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.

Also Read: தனுஷ் படக் காட்சியை சுட்ட கன்னட திரைப்படம்.. 150 கோடி வசூலுக்கு இதுதான் காரணம்..

அட்ராங்கி ரே 2021 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம். தமிழில் கலாட்டா கல்யாணம் என்னும் பெயரில் டப் செய்யப்பட்டது. இந்த படத்தில் தனுஷுடன் பாலிவுட் டாப் ஸ்டார் அக்ஷய்குமார் மற்றும் சாரா அலி கான் நடித்திருந்தனர். இந்த படம் கோவிட் ஊரடங்கு காரணமாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சாரா அலி கானை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்யும் தனுஷ் பின்பு சாரா மீது காதலில் விழுவது போல் படம் அமைந்து இருக்கும். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்த படத்தில் தனுஷின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

Also Read: சிம்புவுடன் கூட்டணி போடும் தனுஷ்.. டைரக்டர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

நடிகை சாரா அலி கான் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது நடிகர் தனுஷ் அட்ராங்கி ரே படப்பிடிப்பின் போது தனக்கு நிறைய விஷயங்கள் கற்று கொடுத்ததாகவும், மேலும் தனக்கு தனுஷ் மீது பயங்கர கிரஸ் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

தனுஷ் அட்ராங்கி ரே திரைப்படத்தில் சொந்தக்குரலில் பாடல் ஒன்றும் பாடியிருக்கிறார். அதைப்போலவே நடிகர் சிம்புவும் இந்தியில் தன்னுடைய குரலில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். கோலிவுடை சேர்ந்த சிம்பு மற்றும் தனுஷ் பாலிவூடில் ரசிகர்களை கவர்ந்திழுப்பது மொத்த பாலிவூட்டுக்குமே பொறாமையாக தான் உள்ளது.

Also Read: திரும்பத் திரும்ப மல்லுக்கட்டும் சிம்பு-தனுஷ்.. ஒரே போடாய் எஸ்டிஆர் கையில் எடுக்கும் புது ஆயுதம்

Next Story

- Advertisement -