அடிதடி இல்லாமல் முதல் மூன்று இடத்தை பிடித்த பிக் பாஸ் போட்டியாளர்கள்.. ஓரவஞ்சனை செய்த விஜய் டிவி!

கடந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி துவக்கப்பட்ட பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி 106 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இன்றுடன் நிறைவடைய உள்ளது. எனவே பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே கோலாகலமாக விஜய் டிவியில் ஜனவரி 16 ஆம் தேதி இன்று ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த சீசனில் தற்போது நிரூப், பாவனி, ராஜு, பிரியங்கா, அமீர் ஆகிய 5 பேர் தற்போது இறுதிச்சுற்று வரை தாக்குப் பிடித்துள்ளனர். இவர்கள் இறுதி நாட்கள் வரை வருவதற்கு ஒரே காரணம் மக்கள் அளித்த ஓட்டு தான். அந்த ஓட்டு தான் தற்போது வெற்றியாளரையும் தீர்மானித்துள்ளது.

ஏனென்றால் இந்த ஐந்து பேரில் அதிக வாக்குகளைப் பெற்று முதல் இடத்தை ராஜு பிடித்து, இந்த சீசனின் வின்னர் ஆகியுள்ளார். அவரைத் தொடர்ந்து பிரியங்கா முதல் ரன்னர் அப் ஆகி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை பாவனி பெற்று இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்வாகி உள்ளார். இவ்வாறு பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் முதல் மூன்று இடத்தை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

இந்த சீசன் துவங்கப்பட்ட நாளில் இருந்தே ராஜு, பிரியங்கா இருவரில் ஒருவர் தான் இந்த சீசனின் வெற்றியாளராக ஆகவேண்டும் என்று ரசிகர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த நிலையில், அதுவே தற்போது சாத்தியமாகியுள்ளது. குறிப்பாக பிரியங்கா உடல்நிலை காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆனால் அது ஓரளவு உண்மை என்றாலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்ல மாட்டேன் என்று பிரியங்கா ஆணித்தரமாக நின்று தன்னுடைய விடா முயற்சியை வெளிக்காட்டி உள்ளார். அதன் விளைவாகவே தற்போது பிரியங்காவிற்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. அத்துடன் ராஜு இந்த சீசனின் பக்கா என்டர்டைன்னராக இருந்து சக போட்டியாளர்களை மட்டுமல்லாமல் பிக்பாஸ் ரசிகர்களையும் குஷிப்படுத்தி கொண்டிருந்தார்.

எனவே அத்தகைய கலைஞருக்கு தற்போது முதல் பரிசு கிடைத்திருப்பது பிக்பாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. அத்துடன் பிக்பாஸ் வீட்டில் பல்வேறு பிரச்சினைகளை மேற்கொண்டாலும் அதனை சாதுரியமாக கையாண்டார் பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் எதார்த்தமாக எடுத்துக்கொண்ட பாவனிக்கு மட்டும்தான் இந்த சீசனில் ஆர்மி உருவாகியுள்ளது.

அந்த ஆர்மியின் விடாமுயற்சியாலும், அவர்கள் அளித்த வாக்கினாலும் பாவனிக்கு தற்போது மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார். எனவே ரசிகர்கள் எதிர்பார்த்த நபர்கள்தான் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் முதல் மூன்று இடத்தை பிடித்திருப்பது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்