வில்லன் நடிகருடன் சேர்ந்து பாபி சிம்ஹா செய்யும் கிரிமினல் வேலை.. நிஜத்திலும் கொடூரமாய் நடக்கும் கருடன்

Bobby Simha: அய்யய்யோ இது என்ன படமா, இதுவரை சினிமாவில் மட்டும்தான் இந்த மாதிரி வில்லத்தனமான கேரக்டரை பார்த்திருக்கிறோம். நிஜத்திலும் கிரிமினல் வேலையை செய்து வில்லத்தனத்தை காட்டி மிரட்டி கொண்டு வருகிறார் பாபி சிம்ஹா. அந்த வகையில் உச்சகட்டத்தின் அராஜகத்திற்கு சென்று விட்டார் என்றே சொல்லலாம்.

அதாவது சமீபத்தில், பாபி சிம்ஹாக்கு எந்த பட வாய்ப்புகளும் சொல்லும் படியாக வரவில்லை. ஆனாலும் இவரிடம் பண புதையலை கொட்டி கிடக்கு என்று சொல்லலாம். அதனால் தான் கொடைக்கானல் பக்கத்தில் பெத்தபாறையில் மிகப்பெரிய ஆடம்பரமான பங்களா ஒன்றை கட்டிக் கொண்டு வருகிறார்.

Also read: ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியாக மாறிய 5 தம்பதிகள்.. கேரியரை சோழி முடித்த பாபி சிம்ஹா

அப்படி அந்த பங்களாவை கட்டிக் கொடுக்கும் காண்ட்ராக்டர் உடன் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதை சுமூகமாக பேசி முடிக்காமல் இவருக்கு ஏற்பட்ட கோபத்தை மொத்தமாக தீர்த்து முடிக்க வேண்டும் என்பதற்காக கிரிமினல் வேலையை பார்த்திருக்கிறார்.

அதாவது படங்களில் தான் வில்லன்களை வைத்து அப்பாவிகளை மிரட்டுவது போல் நாம் பார்த்து இருப்போம். அதேபோல தற்போது பாபி சிம்ஹா நிஜத்திலும் செய்து இருக்கிறார். வீடு கட்டுவதில் ஏதோ பண தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனால் பாபி சிம்ஹா, கேஜிஎஃப் படத்தில் நடித்த கருடா என்ற வில்லனை அழைத்துக் கொண்டு அந்த காண்ட்ராக்டரை மிரட்டி இருக்கிறார்.

Also read: பாபி சிம்ஹாவின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த வசந்த முல்லை ட்ரெய்லர்.. இங்கேயும் பயமுறுத்தும் ஆர்யா

அதுவும் எப்படி என்றால் ஒழுங்காக நான் கேட்டபடி எனக்கு வீடு கட்டித் தர வேண்டும். இல்லையென்றால் உன்னுடைய உயிருக்கு நான் உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று கொலை மிரட்டல் கொடுத்திருக்கிறார். அதாவது பணமும், புகழும் இருந்துவிட்டால் என்ன அட்டூழியம் வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பது போல் இருக்கிறது.

என்னதான் காண்ட்ராக்டர் தப்பே பண்ணிருக்கட்டுமே, அதற்காக இப்படி வன்மமாக நடந்திருக்க தேவையில்லை. இது இவருடைய கீழ்த்தனமாக கேரக்டரை காட்டுகிறது. இவர் சொல்வதையும் கேட்டுக்கொண்டு கேஜிஎஃப் வில்லனும் மிரட்டி இருக்கிறார் என்பதுதான் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சினிமாவில் தான் வில்லன் என்று பார்த்தால் நிஜத்திலும் கொடூர வில்லனாக இவர்கள் இருவரும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.

Also read: நந்தா சூர்யா கெட்டப்பில் மிரள விட்ட பாபி சிம்ஹா.. எதிர்பார்ப்பை எகிற வைத்த பிருந்தா மாஸ்டரின் தக்ஸ் ட்ரெய்லர்