தொடர்ந்து ஹிட்டான 3 மலையாள படங்கள்.. அதுக்குன்னு ரஜினியை இப்படியா அசிங்கப்படுத்துறது ப்ளூ சட்டை?

Blue Sattai Teased Rajini: ப்ளூ சட்டை மாறனுக்கு டாப் ஹீரோக்களை கலாய்ப்பது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. அதிலும் சூப்பர் ஸ்டாரை கேலி கிண்டல் செய்வதை இவர் முழு நேர வேலையாக பார்த்து வருகிறார். அதில் தற்போது மலையாள படங்களை வைத்து ரஜினியை இவர் அசிங்கப்படுத்தி இருப்பது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

எப்போதுமே மலையாள படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருக்கும். அதிலும் குறைந்த பட்ஜெட்டில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மலையாளத்தில் அதிக அளவில் வந்து ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருட ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து மூன்று படங்கள் மாபெரும் வெற்றிவாகை சூடி இருக்கிறது.

அதன்படி சமீபத்தில் வெளியான பிரேமலு, மம்முட்டியின் பிரமயுகம், மஞ்சுமெல் பாய்ஸ் ஆகிய படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று கலெக்ஷனிலும் பட்டையை கிளப்புகிறது. இப்படி ஆரம்பத்திலேயே மலையாளத் திரையுலகம் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Also read: ரஜினி ஒதுக்கியதால் அக்கடதேசம் ஓடிய இளம் இயக்குனர்.. பருப்பு வேகாததால் நண்பன் சிவகார்த்திகேயனிடம் சரண்டர்

ஆனால் கோலிவுட்டை பொறுத்தவரையில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அயர்லான், கேப்டன் மில்லர், லால் சலாம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு போகவில்லை. ஆனால் சக்சஸ் மீட் வைப்பது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது ஒரு விதத்தில் மானப் பிரச்சினையும் கூட.

அதனாலயே லால் சலாம் படம் வெற்றி என சக்சஸ் மீட் வைத்து அலப்பறை கொடுத்தது தயாரிப்பு குழு. இதைத்தான் தற்போது ப்ளூ சட்டை பங்கமாக கலாய்த்து உள்ளார். தரமான படங்களை கொடுத்து வெற்றி பெற்ற மலையாள சினிமாக்களே அடக்கி வாசிக்கின்றனர்.

ஆனால் குறைகுடம் கூத்தாடும் என்பதற்கு ஏற்ப பொய்யாக சக்சஸ் மீட் கொண்டாடி வருகிறது கோலிவுட் திரையுலகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் சூப்பர் ஸ்டாரை கலாய்த்து தள்ளி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. என்ன இருந்தாலும் தலைவரை இப்படியா கலாய்க்கிறது.

Also read: லால் சலாம் படத்தால் அஜித்துக்கு ஏற்பட்ட தலைவலி.. கப்பு சிப்பின்னு வாய மூடிட்டு வேடிக்கை பார்க்கும் லைக்கா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்