லால் சலாம் படத்தால் அஜித்துக்கு ஏற்பட்ட தலைவலி.. கப்பு சிப்பின்னு வாய மூடிட்டு வேடிக்கை பார்க்கும் லைக்கா

Ajith got a headache from Lal Salaam: அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படம் பல மாதங்களாக இழுவையில் இழுத்து அடித்துக் கொண்டது. இதற்கு முக்கிய காரணம் அஜித் பைக் வேர்ல்ட் டூர் போனதால் தான் எல்லாமே இழுப்பிரியாக மாறிவிட்டது என்று ஒவ்வொருவரும் வாய்க்கு வந்தபடி பேசி வந்தார்கள். ஆனால் தற்போது தான் தெரிகிறது விடாமுயற்சி படம் எதுனால இழுத்தடித்தது என்று.

அதாவது இப்படம் ஆரம்பிப்பதற்கு முன்னே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி மொகைதீன் பாய் கேரக்டரில் லால் சலாம் படத்தில் கமிட்டாகி விட்டார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வந்தது. இந்நிலையில் இப்படத்திற்காக அதிக பொருட்செலவு செய்து வந்ததால் லைக்காவால் விடாமுயற்சி படப்பிடிப்பை யோசிக்க முடியாமல் போய்விட்டது.

அதன்பின் லால் சலாம் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் லைகா நிறுவனத்தினர் சுபாஸ்கரன் விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்கி வைத்தார். இந்நிலையில் லால் சலாம் படம் வெளிவந்து எதிர்பார்த்த அளவிற்க்கு வசூல் அளவில் வெற்றி பெறவில்லை. இதில் வணிக ரீதியாக தற்போது துவண்டு போயிருக்கும் லைக்காவால் மேற்கொண்டு விடாமுயற்சி படப்பிடிப்பை கொண்டு போக முடியவில்லை.

Also read: அஜித் இதுக்கு தான் விக்னேஷ் சிவனை நிராகரித்தாரா.? கணவனுக்காக வரிந்து கட்டிய நயன்தாரா

இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பு சற்று மந்தமாகவே போய்க்கொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல் இப்படத்தை கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்த படத்தை கமிட் பண்ணி இருந்தார். இப்பொழுது இந்த படத்திலும் கவனம் செலுத்த முடியாமல் அஜித் பெரிய தலைவலியில் தவித்துக் கொண்டு வருகிறார்.

அத்துடன் இதைப் பற்றி அஜித், லைக்கா நிறுவனத்திடம் பேசிப் பொழுது அவரால் எதுவுமே கூற முடியாமல் கப்பு சிப்பின்னு வாய மூடிட்டு வேடிக்கை பார்க்கும் அளவிற்கு தான் அவருடன் நிலைமை இருக்கிறது. இதனால் அஜித்தின் விடாமுயற்சி படமும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டிய படமும் கேள்விக்குறியாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் லால் சலாம் படம் சொதப்பியதால் தான். இது தெரியாமல் அஜித் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று தேவையில்லாமல் அவர் மீது வீண் பழி சுமத்தப்பட்டது. இதையெல்லாம் சரி செய்யும் விதமாக லைக்கா நிறுவனத்திற்கு விடாமுயற்சி படம் மூலமாக வெற்றி கிடைத்தால் மட்டும்தான் அவரால் பெருமூச்சு விட முடியும்.

Also read: அஜித்தை டேமேஜ் செய்த அமரனின் விஷமிகள்.. சிவகார்த்திகேயன் கூலிப்படை செய்யும் வேலை

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்