Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அத்தி பூத்தார் போல் நச்சுன்னு விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை.. வேண்டுமென்றே குட்டையை குழப்பும் பயில்வான்

ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை கேலி செய்த பயில்வான்.

blue-sattai-maran-bayilvaan

Blue Sattai Maran: சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை தனது யூடியூப் சேனல் மூலம் படங்களை விமர்சனம் செய்து வருகிறார். பொதுவாக நேரடியாக ரசிகர்கள் திரையரங்குக்கு சென்று படத்தை பார்ப்பதை காட்டிலும் இவருடைய விமர்சனத்தை பார்த்து விட்டது தான் செல்கிறார்கள். ஆனால் ப்ளு சட்டை மாறன் பெரும்பாலான படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனம் தான் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அத்தி பூத்தார் போல் ஒரு குறை கூட சொல்லாமல் சமீபத்தில் ஒரு படத்தை விமர்சனம் செய்திருந்தார். இந்த சூழலில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் இந்த விமர்சனத்தை சொல்லி ப்ளூ சட்டை மாறனை வம்புக்கு இழுத்துள்ளார். அதாவது முதலில் ப்ளூ சட்டை மாறனை தான் மதிப்பதாக பயில்வான் கூறி இருந்தார்.

Also Read : இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ப்ளூ சட்டை பாராட்டிய நடிகர்.. இது என்ன புது உருட்டா இருக்கே!

அடுத்ததாக சமீபத்தில் வெளியான போர் தொழில் படத்தை ப்ளூ சட்டை மாறன் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி இருந்தார். பொதுவாக நூறு படங்கள் வெளியானால் அந்த நூறு படத்தையுமே கிண்டல் செய்வதுதான் வழக்கம். ஆனால் போர் தொழிலுக்கு இப்படி விமர்சனம் கொடுத்ததால் படக்குழு தரப்பிலிருந்து பணம் வாங்கி இருக்கிறார்.

அந்த படத்தின் முதல் பாகம் நன்றாக இருந்தாலும் அதில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமே இல்லை. அதுமட்டுமின்றி படத்தில் நிறைய லாஜிக் மிஸ்ஸிங் இருக்கிறது. மேலும் படத்தின் டைட்டிலும் சொதப்பி வைத்துள்ளார்கள். ஆனால் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்திற்கு முட்டுக் கொடுக்கிறார்.

Also Read : போர் தொழில் படத்தில் மிஸ்ஸான 5 மட்டமான லாஜிக்.. காசு வராததால் கழுவி ஊற்றிய பயில்வான்

அவர் நிறைய படங்களுக்கு சரியான விமர்சனம் கொடுத்த நிலையில் இப்போது பணத்திற்கு விலை போகியுள்ளார் என பயில்வான் கூறியிருக்கிறார். ஆனால் ப்ளூ சட்டை மட்டுமல்லாமல் சினிமா விமர்சகர் பலரும் இந்த படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவுக்கு படத்தை இயக்குனர் அருமையாக எடுத்திருக்கிறார்.

சீட்டின் நுனிக்கு வந்த பார்க்கும் அளவுக்கு சீரியல் கில்லர் படமாக பயமுறுத்து இருக்கிறார். இப்படி ப்ளூ சட்டை மாறனே ஒரு நல்ல படத்திற்கு விமர்சனம் கொடுத்திருக்கும் நிலையில் நடுவில் புகுந்த பயில்வான் குட்டையை குழப்பி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவருக்கு பணம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் இப்படி பேசுகிறாரோ ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Also Read : 350 பெண்களுடன் தொடர்பில் இருந்த விஜய் பட வில்லன்.. பரபரப்பை கிளப்பிய பயில்வான்

Continue Reading
To Top