இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ப்ளூ சட்டை பாராட்டிய நடிகர்.. இது என்ன புது உருட்டா இருக்கே!

Blue Sattai Maran: சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனல் மூலம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் பெரிய நடிகர்கள், சிறிய நடிகர்கள், பிரம்மாண்ட பட்ஜெட், சிறு பட்ஜெட் என்று பாரபட்சம் பார்க்காமல் எல்லா படங்களையும் வச்சு செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அந்த வகையில் பொன்னியின் செல்வன், வாரிசு, துணிவு என எந்த படங்களையும் ப்ளூ சட்டை மாறன் மிச்சம் வைத்ததில்லை. அஜித், விஜய் போன்ற நடிகர்களையும் மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை முதல்முறையாக பிரபல நடிகரை பாராட்டி பேசி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

Also Read : காலி பெருங்காய டப்பாவான மணிரத்னம்.. பொன்னியின் செல்வன் 2வை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

அதாவது சமீபத்தில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன், சரத்பாபு ஆகியோர் நடிப்பில் போர் தொழில் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்கையில் ஒரு நெகட்டிவ் கமெண்ட் கூட கொடுக்கவில்லை. அதுவும் சரத்குமாரை ஆஹா ஓகோ என்று புகழ்ந்து தள்ளி இருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் திரை விமர்சனம் செய்தது போல் படமும் நல்ல ரேட்டிங் தான் பெற்றிருந்தது. இந்நிலையில் ப்ளூ சட்டை விமர்சனத்தை பார்த்த சரத்குமார் மாறனுக்கு ட்வீட் செய்துள்ளார். அதாவது போர் தொழில் படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளர் என ஒவ்வொரு அம்சத்தையும் பகுப்பாய்வு செய்து பாராட்டியதற்கு நன்றி.

Also Read : சல்மான் கானால் மன உளைச்சலுக்கு ஆளான ப்ளூ சட்டை மாறன்.. உசுர கையில புடிச்சுகிட்டு பார்த்த படம்

மேலும் உங்கள் விமர்சனத்தினால் படத்திற்கான பார்வையாளர்கள் அதிகமாக கிடைத்துள்ளதாக சரத்குமார் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன், இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன், உங்களிடமிருந்து இன்னும் இதுபோன்ற சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன், அருமையான படத்தை கொடுத்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனா இது என கமெண்ட் செய்துள்ளார்கள். இன்னும் சிலர் ருத்ரன் படத்தில் சரத்குமாரின் நடிப்பு எப்படி என்பதை சொல்லுங்கள் என கிண்டலடித்துள்ளனர். ஆனால் அத்தி பூத்தார் போல் ப்ளூ சட்டை மாறன் நல்ல விமர்சனம் கொடுத்த நிலையில் போர் தொழில் படத்திற்கு பாராட்டுக்களும் குவிந்து தான் வருகிறது.

blue-sattai-maran-sarathkumar
blue-sattai-maran-sarathkumar

Also Read : சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பு அபாரம்.. போர் தொழில் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

- Advertisement -