கருத்து கேட்டு கேட்டு நானே கருத்துட்டேன்.. அகிலன் படத்தை கிழித்து தொங்க விட்ட ப்ளூ சட்டை மாறன்

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துள்ள அகிலன் திரைப்படம் சமூக கருத்து கொண்ட திரைப்படம் என்ற பாராட்டை பெற்று வருகிறது. ஆனாலும் சாமானிய மக்களுக்கு அந்த திரைப்படம் அப்படி என்னதான் சொல்ல வருகிறது என்பது தெளிவாக புரியவில்லை. இருப்பினும் படம் முதலுக்கு மோசம் இல்லை என்ற ரீதியில் வசூலை பெற்று வருகிறது.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த திரைப்படத்தை பற்றிய தன்னுடைய விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதில் எந்த அளவுக்கு இந்த படத்தை விமர்சிக்க முடியுமோ, அந்த அளவுக்கு கிழித்து தொங்கவிட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் துறைமுகம், கண்டெய்னர் போன்ற காட்சிகள் தான் ரிப்பீட் மோடில் வந்து கொண்டிருக்கிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also read: வெறி கொண்ட வேங்கையாக சீறிய ஜெயம் ரவி.. அகிலன் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

அதிலும் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரையும் பார்க்கும் போது அவர்களே கண்டெய்னர் போல தான் தெரிகிறார்கள் எனவும் சிலர் கலாய்க்கின்றனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனும் தன் பங்குக்கு அகிலன் படத்தை கலாய்த்து தள்ளி இருக்கிறார். அதிலும் இப்படத்தை ஜெயம் ரவி எப்படித்தான் ஓகே செய்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வகையில் படத்தில் ஜெயம் ரவியை டெரராக காட்ட வேண்டும் என்று இயக்குனர் பல முயற்சிகளை செய்திருக்கிறார். ஆனாலும் அவரை க்ளோஸ் அப் காட்சியில் பார்த்தால் அமுல் பேபி என்று கொஞ்ச தான் தோன்றுகிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு படம் என்று வந்து விட்டால் குறைந்தபட்சம் 60 சீன்களாவது இருக்கும் ஆனால் இந்த படத்தில் ஒரு சீனே 15 நிமிடங்கள் வருகிறது.

Also read: ஜெயம் ரவிக்காக நடையாய் நடக்கும் மாமியார்.. திரும்பி கூட பார்க்காத சன் டிவி

அப்படி பார்த்தால் படத்தில் மொத்தம் 20 சீன்கள் தான் இருக்கும். இதையெல்லாம் ஒரு கதை என்று எப்படி எடுத்தார்கள் என்றும் நக்கல் அடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் படத்தை பார்க்கும் போது என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை. அதிலும் கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் கழுத்தை அறுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இப்படி உங்களின் கருத்தை கேட்டு கேட்டே நான் கருத்து விட்டேன் என்று தன்னைத்தானே நொந்து கொண்டும் பேசியுள்ளார்.

இப்படி எந்த அளவுக்கு முடியுமோ அப்படி அகிலன் படத்தை அவர் பயங்கரமாக விமர்சித்துள்ளார். இதற்கு ரசிகர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் படத்தை தியேட்டரில் ஒரு கட்டத்திற்கு மேல் உட்கார்ந்து பார்க்கவே முடியவில்லை என்றும் சிலர் சோசியல் மீடியாவில் கதறிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அகிலன் படத்தை இதை விட மோசமாக கிழித்து தொங்கவிட முடியாது என்ற ரேஞ்சுக்கு ப்ளூ சட்டை மாறன் தன் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.

Also read: ஹார்பர் க்ரைமை வெளிச்சம் போட்டு காட்டும் அகிலன்.. ஜெயம் ரவிக்கு வெற்றியா, தோல்வியா.? ட்விட்டர் விமர்சனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்