வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

குடும்பங்கள் கொண்டாடும் 3 ஹீரோக்களுக்கு சரியும் மார்க்கெட்.. SK-வை விடாமல் அசிங்கப்படுத்தும் ப்ளூ சட்டை

Sivakarthikeyan-Blue Sattai Maaran: டாப் கியரில் சென்று கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு இப்போது கெட்ட நேரம் பிடித்து ஆட்டி வருகிறது. சமீபகாலமாக அவர் பற்றிய சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து இதுதான் சமயம் என்று பல பிரபலங்கள் இதை ஒரு கன்டென்ட் ஆக மாற்றி வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் மட்டும் சும்மா இருப்பாரா என்ன.

அவரும் தன் பங்குக்கு சிவகார்த்திகேயனை விடாமல் அசிங்கப்படுத்தி வருகிறார். ஏற்கனவே இமான் கூறியதை வைத்து பல கருத்துக்களை பதிவிட்டு வந்த ப்ளூ சட்டை, இப்போது குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோ இடத்திற்கு வந்த வெற்றிடம் என இன்னும் இரண்டு முக்கிய ஹீரோக்களின் பெயரையும் போட்டு பங்கம் செய்து வருகிறார்.

அந்த வகையில் அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் விஜய் ஒரு காலத்தில் கில்லி, திருப்பாச்சி போன்ற காதல் படங்களை கொடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதில் இடம் பிடித்தார். ஆனால் இப்போது பீஸ்ட், வாரிசு, லியோ போன்ற படங்கள் எதுவும் குடும்பங்களை கவரவில்லை. அதேபோன்று லாரன்ஸ் பேய் காமெடி செய்து குழந்தைகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.

ஆனால் சமீபத்தில் வந்த சந்திரமுகி 2 மொத்தமாக ஊத்திக் கொண்டது. அதனால் அவர் இனி இந்த மாதிரி பேய் கதைகளை வைத்து வண்டி ஓட்ட முடியாது. மேலும் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் ரசிகர்களிடம் எடுபடவில்லை. மாவீரன் ஓரளவு தப்பித்தாலும் இசை மான் தற்போது கிளப்பி இருக்கும் சர்ச்சை பெண்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை சரித்து விட்டது.

இதனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோக்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் குழந்தைகள் மற்றும் பெண்களை ஏமாற்ற வரும் உங்க வீட்டு பிள்ளை யார் என்று அவர் நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய இந்த பதிவு இப்போது வைரலாகி வருகிறது. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கதையாக இருக்கிறது ப்ளூ சட்டை மாறனின் சமீபகால பதிவு.

ஏதாவது ஒரு சர்ச்சையை வைத்து பப்ளிசிட்டி தேடி வரும் இவர் தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் ஆகியோரை பகிரங்கமாக சாடி வந்தார். அந்த லிஸ்ட்டில் தற்போது சிக்கி இருக்கும் சிவகார்த்திகேயன் அவரிடம் மாட்டிக் கொண்டு சின்னாபின்னமாகி வருகிறார். கொஞ்ச நாளில் இந்த பிரச்சனையை எப்படியாவது மக்கள் மறந்து விடுவார்கள் என்று அவர் யோசித்து இருக்கும் நிலையில் ப்ளூ சட்டை நான் இருக்கும் போது எப்படி முடியும் என்ற கதையாக இது போன்ற பதிவுகளை வெளியிட்டு பிரச்சனையை பெரிதுபடுத்தி வருகிறார்.

- Advertisement -

Trending News