உதவி கேட்டும் மறுத்த சிவகார்த்திகேயன்.. ஆதங்கத்தை வெளிப்படையாக கொட்டித்தீர்த்த நடிகர்

பள்ளியில் மாணவர்கள் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள், குறும்புகள் என்று அனைத்தையும் நம் கண் முன்னே காட்டிய சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள். இந்த சீரியலுக்கு தற்போது வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த தொடரில் நடித்ததன் மூலம் சினிமாவில் காமெடி நடிகராக நுழைந்தவர் நடிகர் பிளாக் பாண்டி. இவர் அங்காடித்தெரு, வேலாயுதம், தெய்வத்திருமகள் உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்துள்ளார்.

இவர் தற்போது ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்வை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். அதில் நானும், நடிகர் சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவர் இன்று சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார்.

இதனால் நான் வாய்ப்புகள் இன்றி கஷ்டப்பட்ட நேரத்தில் அவர் எனக்கு அவரின் மேனேஜர் மூலம் பணம் கொடுத்து அனுப்பினார். ஆனால் நான் பணம் வேண்டாம், சினிமாவில் வாய்ப்புகள் இருந்தால் தரச் சொல்லுங்கள் என்று கூறினேன்.

அதற்குப் பிறகு என்னால் சிவகார்த்திகேயனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் இவர் அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை அஞ்சலி இவருக்கு நல்ல தோழியாக இருந்துள்ளார்.

அந்தப் படத்தில் நடித்த பிறகு அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரின் மூலம் சினிமாவில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவரையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அஞ்சலி இவரது அழைப்பை ஏற்கவே இல்லையாம். தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் பிளாக் பாண்டி தன் நண்பர்கள் தனக்கு உதவவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.