வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஹீரோவா நடிச்ச படம் அட்டர் பிளாப்.. பிரபல நடிகருக்கு வில்லனாக மாறிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்

பிக்பாஸ் பிரபலம் ஒருவர் ஹீரோவாக நடித்த படம் படு தோல்வியை சந்தித்ததால் வேறு வழியில்லாமல் பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சம்பவம் பிக்பாஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர்களைவிட சக போட்டியாளர்களுக்கு தான் அதிக அளவு படவாய்ப்புகளும், புகழும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் கவின், தர்ஷன், முகேன்,லாஸ்லியா போன்றவர்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். இவருக்கும் நடிகை ஓவியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஆரவ், மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.

ஆனால் அந்த படம் படு மொக்கையாக இருந்தது. மேலும் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்டவில்லை. இத்தனைக்கும் அந்த படத்தை இயக்கியவர் அஜித்துக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சரண் என்பவர்.

அடுத்ததாக அவர் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது ராஜபீமா தான். ஆனால் அது வரை சும்மா இருக்க முடியாதல்லவா. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மகிழ்திருமேனி இருவரும் இணையும் புதிய படம் ஒன்றில் ஆரவ் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

arav-cinemapettai
arav-cinemapettai

மகிழ் திருமேனி இயக்கும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்தது குணச்சித்திர நடிகராக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட வேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கிறார் ஆரவ்.

- Advertisement -

Trending News