விஜய்சேதுபதியை தொடர்ந்து இன்னொரு படத்தையும் கைப்பற்றிய பிக்பாஸ் பிரபலம்.. பாதில போனவங்களுக்கு பம்பர் பரிசா!

ஏற்கனவே விஜய் சேதுபதி பட வாய்ப்பை கைப்பற்றிய பிக்பாஸ் பிரபலத்திற்கு பொங்கல் போனஸாக இன்னொரு இளம் நடிகரின் பட வாய்ப்பும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் டிவியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியவர் தான் சம்யுக்தா. மாடல் அழகியான இவர் பிக் பாஸ் வீட்டில் ரசிகர்களின் கவனத்தை பெற தவறிவிட்டார்.

இதனால் முதல் சில வாரங்களிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் அதுவும் நல்லதுதான் என்பதைப்போல விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது கௌதம் கார்த்திக் மற்றும் ஸ்ரீ திவ்யா இருவரும் நடிக்கும் புதிய படமொன்றில் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இந்த படத்தின் கதாபாத்திரம் பின்னால் பேசப்படும் என்கிறார்கள்.

biggboss-samyuktha-cinemapettai
biggboss-samyuktha-cinemapettai

பானா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்க உள்ளார். பிக் பாஸ் சீசனில் வெற்றி பெற்றவர்களுக்கு கூட பட வாய்ப்புகள் கிடைக்க நீண்ட நாட்களாகிறது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் வரவேற்பு கொஞ்சமும் இல்லாத சம்யுக்தாவுக்கு எப்படி தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கிறது என பல நடிகைகள் பொறாமையில் இருக்கிறார்களாம்.