நிரூப், பிரியங்கா இடையே வெடித்த பிரச்சனை..

எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்ற சொல்லுக்கு ஏற்ப பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல எதிர்பாராத தரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் அனல் பறக்கிறது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து நியூஸ் சேனல் நடத்தி வருகின்றனர். இதில் சிறப்பாக விளையாடி அதிக மதிப்பெண்கள் பெற்ற ரெட் டிவி அணி வெற்றி பெற்றது. இதை நடுவராக இருந்த சஞ்சீவ் நேற்று அறிவித்தார்.

அதன் பிறகு இன்று நிரூப், பிரியங்காவிடம் டாஸ்க்கில் உங்க இஷ்டத்துக்கு என்னை எதுக்கு கலாய்ச்சீங்க என்று சண்டையிடுகிறார்.  நிரூப் பிரியங்காவை திட்டியதால் கடுப்பான அபிஷேக் உனக்கு பிரச்சனைனா என்கிட்ட வந்து பேசு, ஏன் அவ கிட்ட பேசுற என்று கேட்கிறார்.

உடனே பிரியங்கா இதற்காக கண்டெண்ட் எடுக்கும் போது நீ முன்னாடியே சொல்ல வேண்டியது தானே ஏன் இப்ப வந்து கத்துற என்கிறார். அதற்கு நிரூப் நான் முன்னாடியே சொன்னேன் நீங்கள் கேட்கல என்கிறார். இதனால் ஆத்திரமடையும் பிரியங்கா பிக்பாஸ் நாங்க சிபியோட பெட்ல உக்காந்து தான் பிளான் பண்ணுனோம் அது எல்லாருக்கும் தெரியும் என்று சொல்கிறார்.

மேலும் நான் பேசிய அந்த வீடியோவை தயவு செய்து எனக்காக காண்பியுங்கள் என்று கெஞ்சுகிறார். இல்லாவிட்டால் நான் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று சொல்வதுடன் ப்ரோமோ முடிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டம் நெருங்க நெருங்க அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு வித பயம் வந்துவிட்டது. நிரூப் ஏற்கனவே சற்று பயத்தில் தான் இருந்தார். எங்கே தன்னைப் பற்றிய ஒரு தவறான பிம்பம் வெளியில் தெரிந்து விடுமோ என்று அவர் அஞ்சுகிறார். அதனால் தான் அவர் இவ்வளவு கோபமாக கத்துகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்