மேய்க்கிறது எரும இதுல என்ன பெரும ஜோவிகா.. தமிழை கொன்னு கூறு போடும் வாயாடி பெத்த பொண்ணு

Biggboss 7-Jovika: இதுக்கு தான் படிங்கடா படிங்கடான்னு சொன்னேன் அப்படிங்கற டயலாக் ஜோவிகாவை பார்க்கும்போது ஞாபகத்துக்கு வருகிறது. வனிதாவின் வாரிசான இவர் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதனாலேயே ஒரு பெரும் எதிர்பார்ப்பும் இருந்தது.

இவர் அம்மாவைப் போல் இருப்பாரா இல்லை அதையும் தாண்டி பரபரப்பை கிளப்புவாரா என்ற ஆர்வம் ஆரம்பத்தில் இருந்தது. அதற்கேற்றார் போல் எனக்கு படிப்பு வரவில்லை என்பதை தைரியமாக சொல்லி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

ஆனால் போகப் போக அவரைப் பார்த்தால் அடிப்படை கல்வியாவது தெரிந்திருக்க வேண்டாமா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவர் தமிழை கொன்று கூறு போட்டு வருகிறார். ஏற்கனவே ஜோவிகா தமிழை தாமில் என்று ஒரு முறை எழுதி சோசியல் மீடியாவை பரபரப்பாக்கினார்.

Also read: படுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோவின் தந்தை.. பிக் பாஸில் மறைத்த சீக்ரெட், பெயரோடு போட்டுடைத்த விசித்ராவின் தோழி

அதைத்தொடர்ந்து இப்போது அவர் தன்னுடைய பெயர் ஜோவிகா என்பதை ஜேபவிகா என எழுதி பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வருகிறார். தன் பெயரைக் கூட சரியாக எழுத தெரியாத நிலையில் இருக்கும் இவர் எனக்கு படிப்பு முக்கியம் இல்லை. மற்ற திறமைகள் இருக்கிறது என வாய்ச்சவடால் விடுவது வேடிக்கையாக இருக்கிறது.

இதைத்தான் இப்போது ரசிகர்கள் அடிப்படை தமிழ் கூட தெரியவில்லை. இவரெல்லாம் என்னத்த சாதிக்க போகிறார் என கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் வனிதா தன் மகளுக்கு ஆதரவாக அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறார்.

அதில் தற்போது அவர் ஜோவிகா திரிஷா நயன்தாரா போல் வர வேண்டியவர் என்று கூறியிருப்பதும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு தமிழ் கூட சரியாக தெரியவில்லை இதில் நயன்தாரா திரிஷா வா என ரசிகர்கள் வாயாடி பெத்த பொண்ணை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Also read: இந்த வாரம் கமல் அடித்து விரட்ட போகும் கொலு பொம்மை.. இணையத்தை கலக்கும் பிக்பாஸ் ஓட்டிங் லிஸ்ட்