இந்த வாரம் கமல் அடித்து விரட்ட போகும் கொலு பொம்மை.. இணையத்தை கலக்கும் பிக்பாஸ் ஓட்டிங் லிஸ்ட்

Biggboss 7 Voting: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரின் முகத்திரையும் கிழிக்கப்பட்டு வருகிறது. இதுவே நாளுக்கு நாள் நிகழ்ச்சியின் போக்கை சுவாரஸ்யப்படுத்தி கொண்டிருக்கிறது. அதில் இந்த வாரம் பல ரணகள சம்பவங்கள் நடந்து வருகிறது.

அதனாலேயே ஆண்டவரின் விசாரணையும் அர்ச்சனையும் பலமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதில் தற்போதைய ஓட்டிங் நிலவரப்படி விசித்ரா தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார்.

Also read: நான் வச்ச குறி எப்போதுமே தப்பாது.. அர்ச்சனா விற்கு அதே ஃபார்முலாவை யூஸ் பண்ணும் காமெடி பீஸ்

பிரதீப் வெளியேறிய பின்பு இவருக்கான ரசிகர்கள் வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது. அதனாலேயே இவர் வாரா வாரம் நாமினேட் ஆனாலும் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறார். அதுதான் இந்த வாரமும் நடந்துள்ளது.

இவருக்கு அடுத்ததாக தினேஷ், அனன்யா, மணி, கூல் சுரேஷ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்து கடைசி மூன்று இடங்களை பூர்ணிமா, விக்ரம், ஜோவிகா ஆகியோர் பிடித்திருக்கின்றனர். அதில் வனிதாவின் மகள் தான் கடைசி இடத்தில் இருக்கிறார்.

Also read: படுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோவின் தந்தை.. பிக் பாஸில் மறைத்த சீக்ரெட், பெயரோடு போட்டுடைத்த விசித்ராவின் தோழி

அந்த வகையில் அவருக்கு மிகக் குறைவான ஓட்டுகள்தான் கிடைத்திருக்கிறது. இதிலிருந்து அவர் எந்த அளவு ரசிகர்களால் வெறுக்கப்படுகிறார் என்பதும் தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் அவருடைய நடவடிக்கை தான்.

ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு போக போக நான் ஒரு கொலு பொம்மை என்பதை அவர் நிரூபித்து வருகிறார். அதன்படி சதா நேரமும் இவர் தூங்கும் காட்சிகள் தான் ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது. அதனாலேயே இந்த கொலு பொம்மை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார்.

biggboss7-voting list
biggboss7-voting list