ரவீனாவை எச்சரித்த கோட் வேர்ட்.. தொக்கா தூக்கி வெளியில் வீசிய பிக்பாஸ்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் எப்போது வரும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது. அதில் அர்ச்சனாவின் அப்பா நிக்சன், விக்ரம் ஆகியோரிடம் தன் மகள் விஷயத்தில் அவர்கள் பேசியதை நாசுக்காக பேசியிருந்தார்.

அதையடுத்து இன்று வீட்டுக்குள் வந்திருக்கும் ரவீனாவின் குடும்பம் அவரை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் வசமாக சிக்கி இருக்கிறார்கள். அதன்படி தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரத்தை ரவீனாவின் ஆன்ட்டி கையில் எடுக்கிறார்.

ஆனால் நேரடியாக விஷயத்தை சொல்லாமல் ரெட் என்ற வார்த்தையை மட்டும் கூறுகிறார். உடனே ரவீனா கோட் வேர்டா என கேட்டு பிக்பாஸுக்கு ரூட் போட்டு கொடுத்துவிடுகிறார். உடனே கடுப்பான பிக்பாஸ் நீங்கள் விதிமுறையை மீறி விட்டீர்கள். அதனால் பிக் பாஸ் வீட்டில் உங்கள் நேரம் முடிந்து விட்டது.

Also read: தனியாக உட்கார்ந்து கடலை போடவா ஷோக்கு வந்தீங்க.? ரெக்கை புடுங்கப்பட்ட பிக் பாஸ் காதல் பறவைகள்

வீட்டை விட்டு வெளியே போங்கள் என தொக்காக தூக்கி வெளியில் வீசிவிட்டார். இதனால் அதிர்ச்சியான ரவீனா ப்ளீஸ் பிக்பாஸ் என கதறி அழுகிறார். ஆனாலும் கரையாத பிக்பாஸ் நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என தன் முடிவில் உறுதியாகிவிட்டார்.

இப்படி நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு என்ற கதையாக ரவீனாவின் நிலை மாறிவிட்டது. இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்காத அவரின் குடும்பமும் உடனே வெளியேறிவிட்டனர். அதை தொடர்ந்து ரவீனா அழுவதை பார்த்து சக போட்டியாளர்கள் அவரை ஆறுதல் படுத்துகின்றனர்.

இப்படியாக வெளிவந்துள்ள ப்ரோமோ எதிர்பாராததாக இருக்கிறது. ஏற்கனவே பிரதீப் ரெட் கார்டு விவகாரம் கொழுந்து விட்டு எரிகிறது. இதில் மீண்டும் அந்த பிரச்சனையை ரவீனாவின் குடும்பம் கிளறியது பிக்பாஸை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

Also read: பிக்பாஸில் இளசுகளை கதற விட்டுக் கொண்டிருக்கும் டம்மி மம்மி.. அடேங்கப்பா! ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா