வேலை செஞ்சா தான் சோறு.. பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸை பெண்டு நிமித்த வரும் டாஸ்க்

Biggboss 7 Task: பாதி கிணறை தாண்டிய நிலையில் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் கடுமையான டாஸ்க்குகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. கடந்த வாரம் நடந்த பூகம்ப டாஸ்க்கில் கூட அப்படி ஒன்றும் கஷ்டம் இல்லை என்பது தான் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது.

அதை அப்படியே கேட்ச் பிடித்த பிக் பாஸ் அடுத்த வாரம் போட்டியாளர்களை பெண்டு நிமிர்த்த தயாராகி விட்டார். அதன்படி சைக்கிள் டாஸ்க் வர இருக்கிறது. அதாவது பிக் பாஸ் வீட்டில் ஒரு சைக்கிள் வைக்கப்படும் அதை பெடல் செய்தால் மட்டுமே கேஸ் வேலை செய்யும்.

போட்டியாளர்கள் டயர்ட் ஆகி சைக்கிள் மிதிப்பதை நிறுத்தினால் சாப்பாட்டுக்கு திண்டாட வேண்டியது தான். ஏற்கனவே வீட்டில் முட்டை, பொரியல் என எல்லாத்துக்கும் சண்டை அனல் பறக்கிறது. இதில் இப்படி ஒரு டாஸ்க் கொடுத்தால் என்ன ரணகளம் நடக்குமோ தெரியவில்லை.

Also Read: நியாயமா ரெட் கார்டு இவங்களுக்கு தான் கொடுக்கணும்.. ஆண்டவர் சொல்லியும் கேட்காத அரைவேக்காடுகள்

அந்த அளவுக்கு போட்டியாளர்கள் எதிர் எதிர் துருவங்களாக சதா நேரமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் சைக்கிளை மதிக்க வேண்டும் என்றால் கூல் சுரேஷ் உள்ளிட்ட சிலர் எஸ்கேப் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அதிலும் பிக்பாஸ் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார். அது என்னவென்று அடுத்த வாரம் தான் தெரிய வரும். அந்த வகையில் இந்த டாஸ்க் மூலம் இனி வரும் வாரங்கள் கடுமையாக இருக்கும் என போட்டியாளர்களுக்கு தெரிய வரும். அதை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் எப்படி தயாராகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: அத்தனையும் நாடகமா பேபி.? வனிதா மூஞ்ச ஒடச்சது யாரு.? சந்தேகத்தை கிளப்பிய 3 விஷயங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்