புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அத்தனையும் நாடகமா பேபி.? வனிதா மூஞ்ச ஒடச்சது யாரு.? சந்தேகத்தை கிளப்பிய 3 விஷயங்கள்

Vanitha Vijayakumar: கடந்த இரு தினங்களாகவே வனிதாவுக்கு நடந்த தாக்குதல் சம்பவத்தை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் இவர் தன்னை மர்மநபர் ஒருவர் தாக்கி விட்டதாக புகைப்படத்துடன் ஒரு பதிவை போட்டிருந்தார்.

அவர் பிரதீப்பின் ஆதரவாளர் என்று சொன்னதாகவும் இருட்டில் அடையாளம் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுதான் இப்போது பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது. ஏனென்றால் வனிதா தன்னை யாராவது ஒருவர் மட்டமாக பேசினாலே பதிலடி கொடுத்து விடுவார்.

அவ்வளவு ஏன் சில சமயம் இது போலீஸ் பஞ்சாயத்து ஆகவும் மாறி இருக்கிறது. அப்படி இருக்கும் அவர் தன்னை தாக்கியவரை சும்மாவா விடுவார். ஆனால் இந்த விஷயத்தில் அவர் எதுவும் செய்யாமல் இருக்க பின்வரும் விஷயங்கள்தான் காரணமாக யூகிக்கப்பட்டு வருகிறது. அதில் முதலாவது ஆக அவருடைய மகள் ஜோவிகா பிக் பாஸில் வேண்டாத விருந்தாளி போல் இருக்கிறார்.

Also read: விஜய் டிவியால் நொந்து போன 5 பிரபலங்கள்.. கண்ணீர் விட்டு கதறி அழுத அச்சுமா

சாப்பிடுவது, தூங்குவது, கீழே விழுவது என இருக்கும் இவரை ரசிகர்கள் கண்டபடி கலாய்த்து வருகின்றனர். இதன் மூலம் அவர் தன் மகளை காப்பாற்ற முயற்சி செய்கிறார் எனவும் கூறப்படுகிறது. இரண்டாவதாக இந்த சம்பவத்தால் வனிதா பிக்பாஸ் ரிவ்யூ செய்யும் சேனலுக்கு இலவச விளம்பரம் கிடைக்கும்.

அதே போன்று விஜய் டிவியின் டிஆர்பியும் உயரும். அதை வைத்தே தன் மகளை நடிகையாக உயர்த்தி செல்லலாம் என்பதும் அவருடைய பிளானாக இருக்கலாம். மூன்றாவதாக இதை வைத்து சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி ட்ரெண்டிங்கில் ஒரு ரவுண்டு வரலாம்.

இதனால்தான் அவர் இந்த விஷயம் குறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆக மொத்தத்தில் இது அத்தனையும் நாடகம் என்ற ரீதியில் தான் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு வனிதாவை யாரும் நம்பவில்லை என்பதுதான் உண்மை.

Also read: பிரதீப் ரெட் காடுக்காக விழுந்த அடி.. மர்ம நபர்கள் வனிதாவின் கன்னத்தை பழுக்க வைத்த புகைப்படம்

- Advertisement -

Trending News