நிஜ அரசியல்வாதிகளுக்கே டப் கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்கள்.. சூடு பிடித்த தேர்தல் களம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் அரசியல் வாதிகளாக மாறி டாஸ்க் செய்து வருகின்றனர். அதில் அனைவரும் மூன்று அணிகளாக பிரிந்து தங்களுக்கென்று ஒரு கட்சியை அமைத்து பிரச்சாரம் செய்தனர்.

இந்த வாரம் முழுவதும் நடந்த டாஸ்க்கில் ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய கொள்கைகளையும், சிறப்புகளையும் பற்றி கூறினர். மேலும் கட்சியின் மாநாடு, பிரச்சாரம், கட்சி கூட்டணி என்று நிஜ அரசியலை போலிருந்தது.

அதில் சஞ்சீவ் கட்சி மற்றும் சிபியின் கட்சி இருவரும் இணைந்து கூட்டணியாக மாறி செயல்பட்டனர். பிரியங்காவின் கட்சி வழக்கம் போல் தனித்தன்மையுடன் செயல்பட்டது. ஆனால் மற்ற இரு கட்சிகளும் கூட்டணி அமைத்ததை பார்த்த பிரியங்கா எங்கே தோற்று விடுமோ என்று இராஜதந்திரியாக செயல்பட முடிவு எடுத்தார்.

அவரது எதிர் கட்சி உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து எங்கள் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று அவர்களின் மனதை கலைக்க முயன்றார். மேலும் அனைவரிடமும் ஒரே மாதிரியாக எங்களுக்கு ஓட்டு போட்டால் நீங்களே தலைவராக இருந்து கொள்ளலாம் என்று ஆசைவார்த்தை காட்டினார்.

இது பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. இறுதியில் வாக்குப் பதிவு செய்யும் நேரமும் வந்தது. போட்டியாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து தங்கள் கட்சிக்கு வாக்களித்தனர். பிறகு ஓட்டு எண்ணிக்கை முடிவில் கூட்டணி கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதில் மேலும் ஒரு சுவாரஸ்யமாக 4 பேர் மட்டுமே இருந்த பிரியங்காவின் கட்சிக்கு 5 ஓட்டுகள் விழுந்திருந்தது. இதனால் கூட்டணி கட்சியில் உள்ள போட்டியாளர்கள் யார் அந்த கருப்பு ஆடு என்று தேட ஆரம்பித்தனர். அவர்களை மேலும் குழப்பும் விதமாக பிரியங்கா எதிர்க் கட்சியில் உள்ள ஒவ்வொருவரையும் கட்டி அணைத்து எங்களுக்காக ஓட்டு போட்டதுக்கு மிகவும் நன்றி என்று கலாய்த்தார்.

பிறகு ராஜு, உலக உருண்டையை வைத்து கொண்டு கூட்டணியில் இருந்த ஒவ்வொருவரும் தமது கட்சிக்கு தான் ஓட்டு போட்டேன் என்று அதன் மீது சத்தியம் செய்யும்படி கூறினார். அப்படியும் கூட அவர்களால் அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியில் அவர்களே நிஜ அரசியலிலேயே இப்படித்தான் இருக்கும் பிக்பாஸ் வீட்டில் இது என்ன புதுசா என்ற முடிவுக்கு வந்தனர். இருந்தாலும் அனைவருக்கும் பிரியங்காவின் நண்பனான நிரூப்பின் மேல் அதிக சந்தேகம் இருந்தது. இந்த சந்தேகம் ரசிகர்களாகிய நமக்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்