சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பிக்பாஸ் பத்த வச்ச நெருப்பு இப்ப No.1 ட்ரெண்டிங்.. சின்னா பின்னமாகிப் போன அசீமின் ராஜதந்திரம்

விஜய் டிவியின் இந்த வருட பிக்பாஸ் நிகழ்ச்சி பயங்கர ரணகளமாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் புதுப்புது சண்டைகள், புதுப்புது பிரச்சனைகள் என்று இந்த சீசன் போட்டியாளர்கள் அனைவரும் கொலை வெறியுடன் திரிந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் ஒருவரை மட்டுமே டார்கெட் செய்து பிரச்சினையை கிளப்பும் சம்பவமும் நடக்கிறது.

அந்த வகையில் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து தன்னுடைய கோபத்தை அளவுக்கு மீறி காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்த அசீம் சமீப காலமாக கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். ஆனாலும் அவரை தேடி மொத்த பிரச்சனையும் வரிசை கட்டி நிற்கிறது. அதிலும் நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த சண்டை தற்போது சோசியல் மீடியாவில் பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.

Also read: யாரும் எதிர்பாராத ட்விஸ்ட், பஜாரியை அடித்து துரத்தும் பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தான்

இந்த வாரம் பிக்பாஸ் வீடு ராயல் மியூசியமாக மாறி இருக்கிறது. அதில் ராஜா, ராணியாக ராபர்ட் மற்றும் ரட்சிதா இருவரும் இருக்கின்றனர். அவர்களின் படை தளபதி தான் அசீம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கிச்சன் பொறுப்பில் இருக்கும் சிவின் ராணி சாப்பிடும் உணவில் அளவுக்கு அதிகமான உப்பை கலந்து விடுகிறார்.

இது விசாரணைக்கு வரும்போது படைத்தளபதி இதை சரியாக கவனிக்கவில்லை என்று அசீமின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இப்படியாக ஆரம்பித்த விவாதம் பயங்கர சண்டையாக மாறிவிட்டது. அதில் விக்ரமன் மற்றும் அசீம் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப் பார்த்த சக போட்டியாளர்கள் இதுதான் சமயம் என்று ஒட்டுமொத்தமாக ஒன்று கூடி அசீமுக்கு எதிராக பேச ஆரம்பித்து விட்டனர்.

Also read: நான் உன்ன தங்கச்சினு நினைச்சேன் அவமானப்படுத்திட்ட.. ஜனனியால் ரணகளமான பிக்பாஸ் வீடு

இப்படி வீட்டில் இருந்த அத்தனை பேரும் தனக்கு எதிராக திரும்பிய நிலையில் கூட அசீம் அசால்ட்டாக அதை சமாளித்தார். ஆனால் அவர் எல்லை மீறி அளவுக்கு அதிகமாக சண்டை போட்டது சர்ச்சையாக பார்க்கப்பட்டாலும் இப்போது இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமே சிவின் தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் பற்ற வைத்த நெருப்பில் சிக்கி அசீம் சின்னாபின்னமாகிவிட்டார். இருப்பினும் அவருக்கான ஆதரவு தற்போது சோசியல் மீடியாவில் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மனதிற்குள் வன்மத்தை வைத்துக்கொண்டு அசீமை டார்கெட் செய்து வருவது அப்பட்டமாக தெரிகிறது. இதுவே அவருக்கான ஆதரவையும் அதிகரிக்க வைத்துள்ளது.

Also read: குடும்ப குத்து விளக்கு மாதிரி நடிக்கிறது.. காசுக்காக பிக்பாஸ் லிப் லாக் நடிகை செய்த மட்டமான வேலை

- Advertisement -

Trending News