என் தந்தை எனக்கு மகனாக பிறந்துள்ளார்.. பிக்பாஸ் ஆரவ் உருக்கமாக வெளியிட்ட புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 1 ல் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர் நடிகர் ஆரவ். ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆரவ் பிக்பாஸ் வெற்றிக்குப் பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.

அவர் ஹீரோவாக நடித்த மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் பரவலாக வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து ஆரவ் மீண்டும் அருகில் வா என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

ஆரவ் தன்னுடைய நீண்டநாள் தோழியான ரஹீ என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணத்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வந்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆரவ் தான் தந்தையாகப் போகும் செய்தியை ரசிகர்களுக்கு அறிவித்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் தன்னுடைய மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள் வெளியானது. தற்போது ஆரவ் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆரவ் தன் குழந்தையின் விரல்களை பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர். 11 மாதங்களுக்கு பிறகு என்னுடைய அப்பா மீண்டும் எங்களிடம் திரும்பியுள்ளார். அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

ஆரவின் தந்தை கடந்த வருடம் டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அதனால் மீளாத்துயரில் இருந்த ஆரவ் தன் தந்தையே மீண்டும் தனக்குக் குழந்தையாகப் பிறந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

arav
arav
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்