சமீபகாலமாக தமிழ் சினிமாவுக்கு நடிகர் நடிகைகளை அனுப்பும் வேலையை விஜய் டிவி நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. விஜய் டிவியில் இருக்கும் பல பிரபலங்களும் தொடர்ந்து சினிமாவில் அடியெடுத்து வைத்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவி பிரபலங்கள் தான் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை தொட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது புகழ், சிவாங்கி, அஸ்வின், பவித்ரா லக்ஷ்மி என எக்கச்சக்க குக் வித் கோமாளி பிரபலங்கள் சினிமாவில் அறிமுகமாக தொடங்கிவிட்டனர்.
அதேபோல் கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சம்யுக்தா என்பவருக்கும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு சென்னையில் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்.
அதன் பிறகு பல பெரிய அளவு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொண்டு செட்டில் ஆன சம்யுக்தா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
இவருக்கு பிக்பாஸில் இரண்டும் கெட்டான் கதைதான். நல்லவங்களா, கெட்டவங்களா என்ற குழப்பத்திலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் நாட்களை ஓட்டி விட்டு சென்று விட்டார். அதன் பிறகு சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. தற்போது சசிகுமார் நடிக்கும் புதிய படமொன்றில் இரண்டாவது கதாநாயகியாக சம்யுக்தா ஒப்பந்தமாகியுள்ளாராம்.
ஏற்கனவே சமயத்தால் விஜய் சேதுபதி படம் ஒன்றில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சசிகுமார் படம் வாய்ப்பு கிடைத்துள்ளதால் இனி அடுத்தடுத்து சில முன்னணி நடிகர்களின் படங்களின் பட வாய்ப்புகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளாராம்.