ரீலு அந்து போச்சு கிளம்புங்க காத்து வரட்டும்.. பிக்பாஸை விட்டு வெளியேறும் டம்மி பீஸ், தீயாய் பரவும் ஓட்டிங் லிஸ்ட்

Biggboss 7: கடந்த வாரம் பிக்பாஸை விட்டு பிராவோ, அக்ஷயா இருவரும் வெளியேறினர். அதைத் தொடர்ந்து இந்த வாரம் 8 பேர் நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர். அதில் ஆடியன்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்த 2 டம்மி பீஸ் இருக்கின்றனர்.

அதன்படி விசித்ரா, தினேஷ், பூர்ணிமா, மணி, கூல் சுரேஷ், அனன்யா, விக்ரம், ஜோவிகா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் டைட்டில் வின்னர் சரவண விக்ரமை தான் ரசிகர்கள் சில வாரங்களாக ஆவலுடன் எதிர்பார்த்தனர். அந்த அளவுக்கு அவர் ஒரு செட் ப்ராப்பர்ட்டியாக இருக்கிறார்.

அதே போன்று வனிதா மகள் ஜோவிகாவும் தேவையில்லாத ஆணியாக வீட்டில் இருக்கிறார். அதன்படி இந்த இருவரில் ஒருவர்தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்றார் போல் இப்போது ஓட்டுக்களும் இவர்கள் இருவருக்கு தான் மிகவும் குறைவாக கிடைத்திருக்கிறது.

Also read: வேலை செஞ்சா தான் சோறு.. பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸை பெண்டு நிமித்த வரும் டாஸ்க்

அதில் ஜோவிகா தான் விக்ரமை விட குறைவான ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் சரியான பாயிண்ட்டுகளை பேசி பரவால்ல பொண்ணு பொழச்சிக்கும் என ரசிகர்களை நினைக்க வைத்தார். ஆனால் போகப் போக தூங்குவது, எங்கேயாவது கீழ விழுந்து புதையல் எடுப்பது, மரியாதை இல்லாமல் நடப்பது என இவருடைய குணம் பலருக்கும் எரிச்சலை தான் கொடுத்தது.

இப்படி பவர்ஃபுல் போட்டியாளர் என நினைத்த இவர் டம்மி பீஸ் என நிரூபித்து இருக்கிறார். ஆக மொத்தம் இவருடைய ரீல் அந்து போய் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். ஆனாலும் வனிதா தன் மகளுக்காக சோசியல் மீடியாவில் ஆதரவு கேட்டு வருகிறார்.

biggboss-voting
biggboss-voting

தற்போது ஓட்டும் மிகக் குறைவாக இருப்பதால் இவர் விஜய் டிவியிடம் செஞ்சி மகள் வெளியேறாமல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும் இப்போது அவர் மர்ம நபரால் தாக்கப்பட்டு இருக்கிறார். அவரைப் பார்த்துக் கொள்ளவாவது ஜோவிகா வெளியேற வேண்டும் என ரசிகர்கள் நக்கலாக பதிவிட்டு வருகின்றனர்.

Also read: நியாயமா ரெட் கார்டு இவங்களுக்கு தான் கொடுக்கணும்.. ஆண்டவர் சொல்லியும் கேட்காத அரைவேக்காடுகள்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை