ஒரு மாதத்திற்குள் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்.. ஆண்டவரை எச்சரித்த தலைவர் 

Bigg Boss Season 7 Controversy: இதுவரை 6 சீசன்களை ஒளிபரப்பு செய்த விஜய் டிவி ஏழாவது சீசனில் தான் ஏகப்பட்ட பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது. அதிலும் 30 நாட்களுக்குள் பிக் பாஸ்  நிகழ்ச்சியை நிறுத்தவில்லை என்றால் பிக் பாஸ் வீடே இருக்காது என அரசியல் பெரும் புள்ளி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இளம் தலைமுறையினர் பிக் பாஸ் நிகழ்ச்சியை அதிகம் பார்க்கின்றனர். ஒரு பையனும் பொண்ணும் அரைகுறை ஆடையில் பிக் பாஸ் வீட்டில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கின்றனர்.

பாத்ரூமில் முத்தம், படுக்கை அறையில் முத்தம், கண்ணாடிக்கு இடையே கொடுக்கும் முத்தம் என தமிழ் சமூகத்தையே சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நடந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விஜய் டிவிக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தமிழருக்கு என்று ஒரு தனி குணம் உண்டு, தமிழ் சமூகத்தை மோசமான பண்பாட்டு சீரழிவுக்கு அழைத்து செல்லாதீர்கள்!. 

தொடர்ந்து இது போன்ற அசிங்கங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறினால் நிச்சயம் பிக் பாஸ் வீடே இருக்காது என்று கோபத்துடன் விஜய் டிவியை எச்சரித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் எந்த மாதிரியான பண்பாட்டை மக்களுக்கு விதைக்கிறார்கள். எந்த நாகரிகத்தை இளைய தலைமுறைக்கு சொல்லித் தர வருகிறீர்கள், இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர்.

Also Read: நீங்களாச்சு உங்க பிக்பாஸாச்சு ஆள விடுங்க.. மூட்டை முடிச்சை கட்டி தெறித்து ஓடிய பிரதீப்

ஆண்டவருக்கே ஆர்டர் போட்ட தலைவர் 

நிகழ்ச்சி முழுவதும் இரட்டை வசனங்கள், அரைகுறை ஆடையில் பெண் போட்டியாளர்களை ஆட விடுவது போன்று இந்த நிகழ்ச்சியில் காண்பித்து பண்பாட்டு சீரழிவுக்கு வித்திடுகிறீர்கள். தரமான நிகழ்ச்சியை உங்களால் தயாரிக்க முடியவில்லை என்றால், விஜய் டிவி சேனலை இழுத்து மூடிட்டு போகணும். 

ரேட்டிங் என்று பார்வையாளர்களை கவரும் விதத்தில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் பெரும் சுரண்டலுக்கு தமிழருக்கென்று இருக்கும்.மொழி, பண்பாடு, ஆண்- பெண் உறவு, இவற்றில் மோசமான சீர்கேட்டை மக்களுக்கு திணிக்காதீர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன டார்கெட் கொடுப்பது? நான் அந்த நிகழ்ச்சிக்கு டார்கெட் கொடுக்கிறேன்.

ஒரு மாத காலத்திற்குள் விஜய் டிவியும் கமல்ஹாசனும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒழுங்கு படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால், அந்த நிகழ்ச்சி நடக்கும் ஸ்டூடியோ, படப்பிடிப்பு கூடம் எதுவுமே இருக்காது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையாக எச்சரித்து இருக்கிறார். ஆண்டவருக்கே ஆர்டர் போட்டிருக்கும் வேல்முருகனின் இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also Read: இது என்ன பிக்பாஸ் ரெஸ்டாரண்டா? கெட் அவுட்.. அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்