வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வாயில் சுருட்டு, காதில் கடுக்கன் ஹாலிவுட் தரத்திற்கு வெளிவந்த குற்றவாளி பட போஸ்டர்.. பிக்பாஸ் சக்தியின் புது அவதாரம்.!

தமிழ் சினிமாவில் நடிகர் பிரபு நடிப்பில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் அளவிற்கு வெற்றிபெற்ற படம் தான் சின்னத்தம்பி. இப்படம் மூலம் பிரபல இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் பி.வாசு. இவரது மகன்தான் நடிகர் சக்தி. சின்னத்தம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நான் நடிகர் சக்தி. அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பின்னர் தனது தந்தை மற்றும் இயக்குனரான பி.வாசு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான தொட்டால் பூ மலரும் என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் சக்தி. இதனை தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன், ஏதோ செய்தாய் என்னை, தற்காப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் இவரது படங்கள் எதுவுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

சரியான பட வாய்ப்புகள் அமையாததால் வேறுவழியின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சி மூலம் தனக்கு நிச்சயம் தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த சக்திக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சக்திக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகுவதற்கு மாற்றாக ஹேட்டர்ஸ் உருவானார்கள்.

இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் நடிகர் சக்திக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை. அதேபோல் பலரும் தன்னை ட்ரோல் செய்வதாக சக்தி கூறியிருந்தார் .மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது தான் செய்த மிகப்பெரிய தவறு எனவும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

kutravaali-shakthi
kutravaali-shakthi

இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சக்தி புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். குற்றவாளி என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சக்தி வித்தியாசமான கெட்டப்பில் வாயில் சுருட்டுடன் உள்ளார். எது எப்படியோ இந்த படமாவது அவருக்கு நன்றாக அமையட்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News