செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சோம் சேகரை வீட்டோட மாப்பிள்ளையாக்க துடிக்கும் ரம்யா பாண்டியனின் குடும்பம்.. வைரலாகும் ட்விட்டர் பதிவு!

தமிழ் சினிமாவிற்கு ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின் ஆண் தேவதை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் படத்தில் பிரபலமான அதை விட விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

அதன்பிறகு இவர் கவர்ச்சியாக நடித்த போட்டோஷூட் இவருக்கென்று ஒரு ஆர்மியே உருவாகுவதற்கு காரணமானது. அதன் பிறகு இவர்,  கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும், தற்போது பிக்பாஸில் ஃபைனல் கன்டஸ்டன்ட்ஸ் ஆகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ரம்யா பாண்டியனுக்கும் சோம் சிலருக்கும் இடையே இருப்பது என்ன என்பதை ரம்யா பாண்டியனின் குடும்ப உறுப்பினர்கள் மௌனம் கலைத்து உள்ளனர்.

ஏனென்றால் அண்மையில் ரம்யா பாண்டியனின் அக்கா திரிபுரசுந்தரி பாண்டியன் அளித்த பேட்டியின்போது, ‘சோம் சேகரும் ரம்யா பாண்டியனும் திருமணம் கொள்வது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ramya-sister-cinemapettai

மேலும் அண்மையில் பிக்பாஸ் வீட்டில் நடந்த ஃப்ரீஸ் டாஸ்கின் போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ரம்யா பாண்டியனின் சகோதரர், சோம் சேகரை ‘மச்சான்’ என்று அழைத்தது பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதுமட்டுமில்லாமல் ரம்யா பாண்டியனின் சகோதரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘சோம் சேகருடன் நேரம் கழித்து நன்றாக இருந்தது, தங்கமான மனுஷன்’ என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு ரசிகர் ஒருவர், ‘ரம்யா பாண்டியனும் சோம் சேகரும் திருமணம் செய்து கொள்வதை நீங்கள் விரும்புகிறீர்களா?’ என்ற என்று கேள்வி கேட்டதற்கு, ‘அது அவர்கள் எடுக்கவேண்டிய முடிவு’ என்று பதிலளித்துள்ளார்.

bb4-ramya-cinemapettai

எனவே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், ஏதாவது ஒரு காதல் ஜோடி ஒன்று சேராத? என்ற எதிர்பார்ப்பில் பிக்பாஸ் ரசிகர்கள் இருப்பதாக தெரிகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று அனைத்து போட்டியாளர்களும் மிகவே உசாராக தங்கள் விளையாட்டை விளையாடி உள்ளனர்.

- Advertisement -

Trending News