தளபதி 67 இல் இணைந்த பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. ஒருவேளை விஜய்க்கு ரத்த சொந்தமா இருக்குமோ?

விஜய் வாரிசு படத்தை முடித்த கையோடு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மீண்டும் இதே கூட்டணியில் தளபதி 67 படம் உருவாகுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் லோகேஷ் இந்த படத்திற்காக அரிய வகை கேமராக்களை பயன்படுத்தி வருகிறாராம். அது மட்டும் இன்றி இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான் போன்ற பிரபலங்கள் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்போது பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் ஒருவர் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read : வாரிசு, துணிவு எல்லாம் சும்மா டிரெய்லர் தான்.. மீண்டும் மோதும் விஜய், அஜித்

அதாவது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி கிட்டதட்ட 100 நாட்களை இன்றுடன் எட்டி உள்ளது. இந்த வார இறுதியில் யார் டைட்டில் வின்னர் பட்டத்தை அடிக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு தெரிய வரும். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் சென்ற பிரபலங்கள் வெள்ளித்திரையில் படங்களில் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் அஜித்தின் துணிவு படத்தில் கூட அமீர், பாவனி, சிபி ஆகியோர் நடித்திருந்தனர். இப்போது தளபதி 67 படத்தில் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் ஜனனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜனனி பிக் பாஸ் வீட்டில் துனுக்காக
பேசக்கூடியவர்.

Also Read : தில் ராஜ் மீது கோபத்தில் இருக்கும் விஜய்.. வாரிசு படத்தால் ஏற்பட்ட மனஸ்தாபம்

அசீமுக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. மேலும் ஆரம்பத்தில் இருந்தே அமுதவாணன் உடன் ஒரு அண்ணன், தங்கை பாசத்தை ஜனனி கொண்டிருந்தார். இதனாலும் பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சனைகள் வெடித்தது. இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனிக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதுவும் வெள்ளித்திரையில் முதல் படமே தளபதியுடன் நடிக்கும் வாய்ப்பை ஜனனி பெற்றுள்ளார். மேலும் தளபதி 67 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜனனி நடிக்கிறாரா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. இப்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளதால் அடுத்தடுத்த பிரபலங்கள் யார் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியவரும்.

Also Read : டிஆர்பி-காக ஜிபி முத்துவை அழவிட்ட விஜய் டிவி.. இதெல்லாம் ஒரு பொழப்பா!