ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஆம்பள ஜூலி அபிஷேக்.. அநியாயத்துக்கு வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முந்தைய சீசன் களை விட மிகவும் மோசமான டிஆர்பியை பெற்று வருகிறது என விஜய் டிவி நிர்வாகம் மிகுந்த கவலையில் உள்ளதாம். உண்மையில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ரசிகர்களை கவரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

முதல் மூன்று சீசன்களில் இருந்த அளவுக்கு சுவாரசியமான போட்டியாளர்கள் இல்லை. அதேபோல் விளையாட்டு போட்டிகளும் ஒரே மாதிரியாக இருப்பதால் ரசிகர்களுக்கு போரடித்து விட்டது போல. பிக்பாஸ் பார்ப்பதற்கு சர்வைவர் நிகழ்ச்சியை ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்து விடலாம் என முடிவு செய்து விட்டார்கள்.

ஒருகாலத்தில் ஜூலி என்ற ஒரு கதாநாயகி இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை நம்பித்தான் இருந்தது. பொய் பேசுவதில் வல்லவரான ஜூலியை வைத்து நல்ல லாபம் பார்த்தது விஜய் டிவி. போதாக்குறைக்கு ஓவியாவுடன் சண்டை மூட்டிவிட்டு அது வேற லெவல் சீசன்.

அடுத்தடுத்து சீசன்களில் ஜூலி போல் போட்டியாளர் கிடைக்காமல் தடுமாறி வந்த விஜய் டிவிக்கு இந்த முறை அபிஷேக் என்ற ஆம்பள ஜூலி கிடைத்துள்ளார். அவரை அப்படியே வைத்து குறைந்தது 60 நாளைக்காவது எபிசோடை ஓட்டிவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது விஜய் டிவி. என்ன பேசுகிறோம் என்பது தனக்கு புரியாமல் மற்றவர்களுக்கு தெரியாமல் பார்க்கும் ரசிகர்களையும் குழப்பி வருகிறார் அபிஷேக்.

julie-1
julie-1

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் நெட்டிசன்களுக்கு கண்டன்ட் கொடுக்கும் வகையில் அபிஷேக்கின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அமைந்து வருகிறது. இதனால் தயவு செய்து சீக்கிரம் அபிஷேக்கை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டாம் என நெட்டிசன்கள் கோரிக்கை வைக்காத குறைதானாம்.

- Advertisement -

Trending News