ஹிந்தி பிக் பாஸுக்கு போட்டியாக கிஸ் அடிக்கும் போட்டியாளர்கள்.. அமீர், பாவ்னிக்கு அடுத்து யார் தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனும் காதல் கிசுகிசு சர்ச்சைக்கு உள்ளாகும். ஆனால் பிக் பாஸ் சீசன் 5 ல் அதுபோல எதுவும் நடக்காத நிலையில் இப்போது ஒருவழியாக காதல் காட்சிகள் ஆரம்பமாகிவிட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரியங்கா, தாமரை, அக்ஷரா, பாவனி என நான்கு பெண் போட்டியாளர்கள் உள்ளனர். இதில் பாவனி திருமணமாகி கணவனை இழந்தவர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு நபர்கள் அபிநய் மற்றும் பவானி.

அபிநய் ஏற்கனவே திருமணமானவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு டாஸ்க் இல் ராஜு அபினையிடம் பாவனியை காதலிக்கிறீர்களா என்று கேட்டார். இதனால் ராஜு மேல் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கோபப்பட்டார்கள். அதன் பின்பு அனைவரும் இது உண்மைதானா என நினைக்க ஆரம்பித்தார்கள்.

இதற்கிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியில் வீட்டிற்குள் வந்த அமீர் கொஞ்ச நாட்களிலேய பாவனிடம் நெருங்கி பழக ஆரம்பித்தார். பாவனியை காதலிப்பதாக சொன்ன அமீர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாவனிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

பிக் பாஸ் வீட்டில் இவர்களுக்கு முன்னதாகவே அதிகம் கிசுகிசு பேசப்பட்ட ஜோடி பிரபஞ்ச அழகி அக்ஷரா மற்றும் வருண். ஆனால் இவர்கள் இருவரும் நட்பாக பழகி வருவதாக கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் அக்ஷரா, வருணுக்கு முத்தம் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 1ல் ஓவியவிடம் இதே போல நடந்து கொண்ட ஆரவ் அதற்கு மருத்துவ முத்தம் என்னும் பெயரை சூட்டி ஓவியாவை கழட்டி விட்டுவிட்டார். தற்போது அதே போல் பிக் பாஸ் சீசன் 5 வில் அதேபோன்ற காட்சிகள் அரங்கேறி உள்ளது. இந்த ஜோடிகள் கடைசிவரை ஒன்றாக இருப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

bigg boss
bigg boss