சீரியலில் நடிக்கும் பிக் பாஸ் நடிகை.. கடைசில நிலமை இப்படி ஆயிடுச்சே?

செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவருக்காகவே செய்திகள் பார்த்த ரசிகர்கள் ஏராளம்.

அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த அனிதா சம்பத், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு இருந்த ஒட்டுமொத்த நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தி வாசிப்பதை முற்றிலும் நிறுத்திய அனிதா சம்பத் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இதுதவிர விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் போட்டியாளராக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் என்ற தொடரில் கெஸ்ட் ரோலில் அனிதா சம்பத் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் அவர் நடித்த எபிசோடு ஒளிபரப்பாகும் என்றும், இதன் பின்னர், தங்களது சீரியலில் களமிறக்க விஜய் டிவி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த அனிதாவுக்கு இப்படி சீரியல்ல வாய்ப்பு குடுத்து ஏமாத்திட்டீங்களே.!

anitha-samantha-2
anitha-samantha-2

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -