டிரெய்லரை வைத்து வசூலில் ஆட்டிப்படைக்க போகும் துணிவு.. அஜித்துக்கு முழு டான்ஸரான பிக் பாஸ் பிரபலம்

8 வருடங்களுக்குப் பிறகு தல, தளபதி இருவரும் திரையில் மோதிக் கொள்வதால் இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசு மற்றும் துணிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களை எகிற வைத்திருக்கிறது. இந்நிலையில் மக்களிடம் லோன் என்கின்ற பெயரில் வங்கி அடிக்கிற கொள்ளை பற்றிய துணிவு படத்தின் ட்ரைலர் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டது.

இதுவரை துணிவு படத்தின் டிரைலரை 40 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது. ஏற்கனவே ட்ரைலரில் காது கிழியும் அளவுக்கு துப்பாக்கி சத்தத்துடன் மிரட்டியது மட்டுமல்லாமல், எவர் ஸ்மைலிங் உடன் ட்ரைலர் முழுவதும் அஜித் மாஸ் காட்டினார்.

Also Read: ரக ரகமாக துப்பாக்கிகளுடன் விளையாடிய அஜித்.. புத்தாண்டு ட்ரீட்டாக அனல் தெறிக்கும் துணிவு டிரெய்லர்

அதிலும் குறிப்பாக ட்ரைலரிலேயே துப்பாக்கியுடன் குதூகலமாக ஆட்டம் போட்ட அஜித்துக்கு, துணிவு படத்தின் எல்லா பாடல்களுக்கும் நடன இயக்குனராக பிக் பாஸ் பிரபலம் பணியாற்றி இருக்கும் செய்தி தற்போது வெளியாகி உள்ளது. இந்த வாய்ப்பை அஜித் தான் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் அவரும் இணைந்து நடனமாடி இருக்கிறார். கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்த போட்டியாளரான டான்ஸ் மாஸ்டர் அமீர் தான், துணிவு படத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களுக்கும் கொரியோகிராபராக பணியாற்றி இருக்கிறார்.

Also Read: நீயா நானா போட்டியில் துணிவுக்கு விட்டுக் கொடுத்த வாரிசு விஜய்.. உறுதியான ரிலீஸ் தேதி

அஜித் அமீருக்கு தாமாக முன்வந்து இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் அஜித் போன்று, எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என துடி துடிப்பவர் தான் அமீர். இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்திருப்பதாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். மேலும் அமீர் அடுத்த பிரபுதேவா என்று பலரும் கூடிக் கொண்டிருந்த நிலையில், அதை அஜித் நம்பி அவருக்கு துணிவு படத்தில் இப்படி ஒரு சான்சை வாங்கி கொடுத்து இருக்கிறார்.

நிச்சயம் இந்த படத்தில் இதுவரை பார்த்திராத அஜித்தின் நடனத்தை அமீர் பார்க்க வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் டிரைலரில் கூட துப்பாக்கியுடன் மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப் போட்ட அஜித், படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களில் விஜய்க்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆடி இருப்பார். துணிவு படத்திற்கு பிறகு அமீருக்கு நல்ல காலம் தான் என்று இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்கின்றனர்.

Also Read: வங்கி கொள்ளையே இல்ல துணிவு.. கதையில் வினோத் வச்ச ட்விஸ்ட்

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -