Videos | வீடியோக்கள்
ரக ரகமாக துப்பாக்கிகளுடன் விளையாடிய அஜித்.. புத்தாண்டு ட்ரீட்டாக அனல் தெறிக்கும் துணிவு டிரெய்லர்
அஜித் ரசிகர்கள் துணிவு டிரெய்லர் என்ற ஹாஷ் டேக்கை உருவாக்கி அதை ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.
நேற்று முதலிலே சோசியல் மீடியா கொஞ்சம் பரபரப்பாக தான் இருந்தது. ஏனென்றால் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் பெயர் ஒவ்வொன்றாக நேற்று வெளியானது ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்தது.
அந்த வகையில் மஞ்சு வாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்திலும், தயாளன் என்ற கேரக்டரில் சமுத்திரகனியும் நடித்திருக்கின்றனர். அதேபோன்று பிரேம், வீரா, அஜய், ஜான் கோக்கேன் உள்ளிட்ட பலரின் கதாபாத்திரங்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அஜித்தின் கேரக்டர் பெயர் என்ன என்பதை ரசிகர்கள் யூகிக்கும் படியில் படக்குழு விட்டு விட்டது.
Also read: துணிவிற்கு தன் வாயாலே விளம்பரம் செய்த தளபதி.. சத்தமில்லாமல் சந்தோசப்பட்டு வரும் அஜித்
இதுவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை முதலே ட்விட்டர் தளம் ரணகளமாகிக் கொண்டிருக்கிறது. அஜித்தின் துணிவு திரைப்படத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படம் போட்டிக்கு வந்துள்ள நிலையில் அதை முந்திக் கொண்டு துணிவு படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆக இருப்பதும் இந்த பரபரப்புக்கு காரணமாக இருக்கிறது.
ஏனென்றால் ஆரம்பத்திலிருந்து வாரிசு திரைப்படத்தின் அப்டேட் தான் அதிகமாக வந்து கொண்டிருந்தது. மேலும் துணிவு படத்தின் முதல் பாடலே மிகவும் தாமதமாக வெளியான நிலையில் அடுத்தடுத்த பாடல்களும் ஒவ்வொன்றாக வெளிவந்தது. இதனால்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச் செய்ய வேண்டும் என்று துணிவு பட குழு முந்திக்கொண்டு ட்ரெய்லரை வெளியிட இருக்கிறார்களாம்.
Also read: அஜித்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் லைக்கா.. இம்ப்ரஸ் செய்ய கோடிகளை வாரி இறைக்கும் முதலாளி
அந்த வகையில் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருக்கும் இந்த ட்ரெய்லரை ரசிகர்கள் முதல் திரையுலகினர் வரை பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் அஜித் ரசிகர்கள் துணிவு டிரெய்லர் என்ற ஹாஷ் டேக்கை உருவாக்கி அதை ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.
இப்படி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த அந்த ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நாம் எதிர்பார்த்தது போல் படு ஆக்ஷன் ட்ரீட்டாக ட்ரெய்லர் இருக்கிறது. அதிலும் அஜித் துப்பாக்கிகளுடன் விளையாடி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டுள்ளது.
