திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

சும்மா தின்னுட்டு தின்னுட்டு டைட்டில வின் பண்ணலாம்னு நினைச்சீங்களா?. போட்டியாளர்களை வச்சி செஞ்ச பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 85 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் தற்போது வரை ஆட்டம் சூடு பிடிக்காமல் மந்தமாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் கடந்த வாரம் மணிகண்டன் வெளியேறிய நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது விக்ரமன், அசீம், ஷிவின், கதிரவன், ரக்ஷிதா, நந்தினி, அமுதவாணன் மற்றும் ஏடிகே ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிக்க பிக் பாஸ் ஒரு டாஸ்க் வைத்துள்ளார். சும்மா தின்னுட்டு தின்னுட்டு டைட்டில் பட்டதை அடிக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு சரியான ஆப்பு வைத்துள்ளார். அதாவது பிக் பாஸ் வீட்டில் ரசிகர்களை மகிழ்விக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை சொல்ல சரியான நேரம் என கூறுகிறார். எல்லோரும் தங்கள் மனதில் பட்ட கருத்துக்களை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

Also Read : சோசியல் மீடியாவில் வழுக்கும் எதிர்ப்பு.. பிக் பாஸ் எலிமினேஷனை குறித்து கொந்தளித்த ஆர்மி

ஆனால் அவர்கள் பேச ஆரம்பிக்கும்போதே கேள்வி கேட்டு போட்டியாளர்களை பிக் பாஸ் மடக்குகிறார். அந்த வகையில் மைனா நந்தினி புதுவிதமாக நான் என் பங்களிப்பை கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். அதற்கு பிக் பாஸ் என்ன நீங்க செஞ்சீங்க என்பதை மட்டும் கூறுங்கள் என்று கூறுகிறார்.

அடுத்ததாக பிக் பாஸ் வீட்டில் அசீம் அனைவரையும் என்டர்டைமென்ட் செய்ததாக கூறியுள்ளார். அதற்கு ஹவுஸ் மேட்ஸ் சொல்வது இருக்கட்டும் நீங்க சொல்லுங்க என கிண்டலாக பிக் பாஸ் பேசுகிறார். மேலும் கதிரவன் பேசுகையில் எவ்வளவு சுத்தமாக ஒரு விஷயத்தை செய்ய முடியுமோ அப்படி செய்துள்ளதாக கூறினார்.

Also Read : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன்.. 83 நாட்களுக்கு மொத்தமாக வாங்கிய சம்பளம்

அதற்கு எப்படி என்று பிக் பாஸ் கதிரவன் வாயை அடைக்கச் செய்தார். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்கான கருத்துக்களை சொல்ல வரும்போது பிக் பாஸ் சரமாரியான கேள்விகளை கேட்டார். இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் பேச முடியாமல் அப்படியே மௌனம் காத்தனர்.

ஆகையால் கிட்டத்தட்ட 85 நாட்கள் ஆகியும் போட்டியாளர்கள் யாரும் தங்களது திறமையை வெளிப்படுத்தவில்லை என்பது இந்த டாஸ்கின் மூலம் தெரிய வர உள்ளது. அதன் பிறகாவது அவர்கள் தனக்கான ஆட்டத்தை திறம்பட விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். மேலும் பிக் பாஸ் இறுதி நாட்களுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளதால் அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read : யாரும் எதிர்பார்க்காத பிக் பாஸ் வைல்ட் கார்டு என்ட்ரி.. டிஆர்பியை தக்க வைக்க மாஸ்டர் பிளான்

- Advertisement -spot_img

Trending News