சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பாவாடை தாவணியில் தேவதை போல் ஜொலிக்கும் பாலா பட நடிகை.. குவியும் லைக்குகள்

தமிழ் சினிமாவில் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் வெளியான தெகிடி படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஜனனி. இப்படத்தில் இவரது நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்தது. இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்திருந்த அவன் இவன் படத்தில் பெண் போலீசாக ஜனனி நடித்திருந்தார். இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணையலாம் என எதிர்பார்த்த ஜனனிக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.

பாலா படத்தில் நடித்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் நல்ல நிலைக்கு வரலாம் என ஜனனி நினைத்தார். ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே தோன்றிய ஜனனிக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலமாவது பிரபலமாகி விடலாம் என நினைத்தார்.

ஆனால் இதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் தான் சமீபத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ஐயரை நீக்கிவிட்டு இனிமேல் நான் ஜனனி மட்டுமே என அறிவித்து நெட்டிசன்களின் பாராட்டை பெற்றார். மேலும் படங்களில் வாய்ப்பு கிடைப்பதற்காக அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார்.

இதுமட்டுமன்றி லாக் டவுன் சமயத்தில் தனது சகோதரியுடன் இணைந்து புதிய பிசினஸ் ஒன்றையும் ஜனனி தொடங்கியுள்ளார். வெளிநாடுகளிலிருந்து பிரபல ஆடை வடிவமைப்பாளர்களால் டிசைன் செய்யப்பட்ட உயர் தர ஆடைகளை இறக்குமதி செய்து இணையதளம் மூலம் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் நல்ல லாபமும் பார்த்து வருகிறார்.

janani
janani

இருப்பினும் எப்படியாவது சினிமாவில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அழகழகான உடைகளை உடுத்தி போட்டோஷூட் நடத்தி அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாவாடை தாவணியில் தேவதை போல் ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

janani
janani
- Advertisement -

Trending News