கடந்த 5 சீசனில் 50 நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாத போட்டியாளர்கள்.. எதிர்பார்ப்பை கிளப்பிய பிக்பாஸ் அல்டிமேட்

பிக்பாஸ் அல்டிமேட் இன்று பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. பிக் பாஸ் கடந்த ஐந்து சீசன்கள் ஆக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது பிக்பாஸ் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளசில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த ஐந்து சீசன்களில் பங்குபெற்ற போட்டியாளர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு செல்கிறார்கள். அவ்வாறு பங்குபெறும் போட்டியாளர்கள் எவ்வளவு நாட்களில் வெளியேறினார்கள் என்ற பட்டியலைப் பார்ப்போம்.

பிக் பாஸ் சீசன் 1 : கவிஞர் சினேகன் முதல் சீசனில் கலந்துகொண்டு இறுதி வரை சென்று இரண்டாம் இடம் பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக நடிகை சுஜா வருணி முதல் சீசனில் கிட்டத்தட்ட 91 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார்.

ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடந்த போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட இவர் 42 நாட்களிலேயே எலிமினேட் ஆகிவிட்டார். நகைச்சுவை நடிகர் பரணி சில காரணங்களினால் தானாகவே 14 நாட்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

பிக் பாஸ் சீசன் 2 : தாடி பாலாஜி சில கருத்து வேறுபாடுகளால் அவர் மனைவியை பிரிந்து இருந்தார். ஆனால் அவர் மனைவி நித்யாவும் இந்த சீசனில் கலந்து கொண்டார். பாலாஜி 98 நாட்களில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆனார். நடிகர் ரியாஸ் கான், உமா ரியாஸ் ஆகியோரின் மகன் ஷாரிக் பிக் பாஸ் சீசன் 2வில் பங்கு பெற்றார். இவர் 41 நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக் பாஸ் சீசன் 3 : விஜயகுமார், மஞ்சுளா இவர்களின் மகள் வனிதா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கு பெற்றார். இவர் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று சில வாரங்களிலேயே வெளியேறிவிட்டார். நடிகை அபிராமி பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கு பெற்றார். இவர் கிட்டத்தட்ட 56 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார். இந்த சீசனில் இவருடன் நடிகை ஷெரின் பங்கு பெற்றார். இவர் போட்டியின் இறுதி வரை சென்று மூன்றாவது ரன்னர் அப் ஆனார்.

பிக் பாஸ் சீசன் 4 : பிக் பாஸ் சீசன் 4 ல் சுரேஷ் சக்ரவர்த்தி பங்கு பெற்றார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். சுரேஷ் 35 நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதே சீசனில் பங்குபெற்ற செய்தி வாசிப்பாளர் அனிதா 84 நாட்களில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆனார். நடிகர் பாலாஜி முருகதாஸ் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று முதல் ரன்னர் அப் ஆனார்.

பிக் பாஸ் சீசன் 5 : ஸ்ருதி பிக் பாஸ் 5வது சீசனில் பங்கு பெற்றார். இவர் 35 நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் 77 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார். நீருப் இந்நிகழ்ச்சியில் இறுதிவரை பங்குபெற்று நாலாவது ரன்னர் அப் ஆனார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்