வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சீசனுக்கு சீசன் தொடரும் அன்பு கூட்டணி.. மீம்ஸ் போட்டு பங்கம் செய்த நெட்டிசன்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே டெக்னிக்கை பின்பற்றி போட்டியாளரை தேர்வு செய்கின்றனர் என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அதை உறுதி செய்யும் வகையில், தற்போது பிக் பாஸ் சீசன்5 அமைந்த போட்டியாளர்களும் இதற்கு முந்தைய சீசன்களில் இருந்த கதாபாத்திரங்களை போலவே அமைந்துள்ளனர்.

அதாவது சென்ற சீசனில் ஆங்கர் அர்ச்சனா போட்டியாளராக கலந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து தற்போதைய சீசனில் ஆங்கர் பிரியங்கா களமிறங்கியுள்ளார். அதேபோல் சென்ற சீசனில் சோம் போட்டியாளராக இருந்தார். அவரைப்போலவே பிக் பாஸ் சீசன்5ல் நிரூப் இருக்கிறார்.

இவர்களைப் போலவே சென்ற சீசனில் ரியோ இருந்தார். இந்த சீசனில் அபிஷேக் இருக்கிறார். சென்ற சீசனில் இருந்த அர்ச்சனா, ரியோ, சோம் ஆகியோரின் அன்பு கூட்டணி போலவே, இந்த சீசனின் பிரியங்கா, நிரூப், அபிஷேக்  இந்த சீசனிலும் அன்பு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். அவர்களை போலவே இந்த சீசனிலும் அவர்களின் ரோல்களையும் இவர்களே நடித்து வருகின்றனர் என்றே கூறலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஆங்கர் அச்சுமா தனது ரசிகர்கள் மத்தியில் அவரின் பெயரை அவரே கெடுத்துக் கொண்டார். அர்ச்சனாவைப் போலவே ஆங்கர் பிரியங்கா தன்னுடைய இமேஜை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறார். இதற்கு இடையில் அபிஷேக்கின் அட்ராசிட்டிஸ் அளவு மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.

bb5-memes-cinemapettai11
bb5-memes-cinemapettai11

அந்த சீசனில் சோம் போலவே, இந்த சீசனில் நிரூப் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருக்கிறார். அவர்கள் மூவரை போலவே இவர்கள் மூவரும் நடந்து கொள்வதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

எனவே சென்ற சீசனில் அர்ச்சனா, ரியோ, சோம்  மூவரும் அமர்ந்து பிறரை பற்றி புரனி பேசும் காட்சியையும், தற்போது பிக் பாஸ் சீசன்5ல் பிரியங்கா, நிரூப், அபிஷேக் மூவரும் அமர்ந்து புரனி பேசும் காட்சியையும் ஒன்றாக இணைத்து மீம்ஸ் ஆக உருவாக்கி ட்விட்டரில் பதிவிடப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பது உண்மை என்று ரசிகர்கள் தரப்பில் பல்வேறு கருத்துகள் குவிந்து வருகிறது.

- Advertisement -

Trending News