திட்டமே போடலையா.. பாவனியை கிழி கிழின்னு கிழித்த கமல்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவார். அப்பொழுது கடந்த வாரத்தில் யார் யார் என்னென்ன தவறு செய்தார்கள் என்பதை சுட்டிக்காட்டும் கமல், இந்த வாரம் சுருதி தாமரையின் காயினை எடுத்ததை வைத்து நிகழ்ச்சியை விறுவிறுப்புடன் கொண்டு சென்றார்.

ஏனென்றால் தாமரைப் உடைமாற்றும் அறையில் இருந்தபோது, அப்போது நுழைந்த பாவனி மற்றும் சுருதி இருவரும் தாமரைக்கு தெரியாமல் காயினை எடுத்துவிட்டனர்.

உடைமாற்றும் அறையில் அப்படி செய்தது நல்ல பண்புக்கு அழகில்லை. இதை கமல் அவர் பாணியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அன்பு, பாசம் மட்டுமல்லாமல் பண்பும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று சுருதி மற்றும் பாவனியை கண்டித்தார்.

அத்துடன் தாமரையிடம் காயினை எடுத்தபோது சுருதி மற்றும் பாவனியை நல்வழிப்படுத்திய ராஜுவையும் கமல் பாராட்டினார். அத்துடன் பிக்பாஸ் வீட்டில் விதிகளை பின்பற்றுவது போல நெறிமுறைகளையும் பின்பற்றுவது அவசியம் என்றும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் எடுத்துரைத்தார்.

அதன் பிறகு சுருதியும் மற்றும் பாவனி இருவரும் தாமரையிடம் மன்னிப்பு கேட்டாலும், தாமரை அதை ஏற்க மறுத்துவிட்டார். பிறகு தாமரையும் கமல் அவருடைய தவறை மட்டுமல்ல குற்றத்தையும் மன்னிப்பதே சிறந்த பண்பு என்றும் அறிவுறுத்தினார்.

நேற்றைய நிகழ்ச்சி முழுவதும் அறிவுரைகளை பக்கம் பக்கமாக கூறி, பாதி நேரம் கழிந்து நிகழ்ச்சி விறுவிறுப்புடனும் காரசார பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் கொண்டு சென்றார்.

kamal-bigg-boss-season5
kamal-bigg-boss-season5
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்